இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்தது மழை 12 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

11/7/2025 3:58:25 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு மழையளவு குறைந்துள்ளது. இதனால், மழைநீர் தேங்கியுள்ள 12 பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியபிறகு தினமும் பலத்த மழை பெய்து வந்தது. இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மழைநீர் தேங்கியுள்ள தண்டுரை, திருநின்றவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அத்திவாக்கம், பழைய நாப்பாளையம், கோலடி, ஒரக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிகள், ஆவடி நகராட்சி உயர்நிலை பள்ளி, திருவொற்றியூர் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, புழல் ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளி, மணலி செக்டார், கோலடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், கொளத்தூர் புத்தகரம் கல்கி ரங்கநாதன் மெட்ரிக் பள்ளி ஆகிய 12 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கியது.

குறைந்தது மழையளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வடகிழக்கு பருவமழை துவங்கிய பிறகு கடந்த 1ம் தேதி 631 மி.மீட்டர், 2ம் தேதி 212.80 மி.மீட்டர், 3ம் தேதி 718.80 மி.மீட்டர், 4ம் தேதி 434.20 மி.மீட்டர், 5ம் தேதி 425.40 மி.மீட்டர், 6ம் தேதி 531.70 மி.மீட்டர் மழை பதிவானது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 165.50 மி.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இவ்வாறு ஒரு வாரத்தில் மொத்தம் 3,119.40 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): கும்மிடிப்பூண்டி- 36, பொன்னேரி- 28, அம்பத்தூர்- 26, செம்பரம்பாக்கம்- 22.40, திருவள்ளூர்- 9, திருவாலங்காடு- 9, பூண்டி- 8.20, பூந்தமல்லி- 7.50, திருத்தணி- 6, செங்குன்றம்- 5.40, சோழவரம்- 5, தாமரைப்பாக்கம்- 3. மொத்தம் - 165.50 மி.மீட்டர்.

மேலும் சில
  • சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு



  • மிடாஸ் கோல்டன் மதுபான ஆலையில் சோதனை



  • மன்னார்குடியில் தினகரன், திவாகரன் வீடுகள், கல்லூரியில் ஐ.டி ரெய்டு



  • கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை ரெய்டு



  • சசிகலா வக்கீல் வீட்டில் சோதனை



  • அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் வீட்டில் ரெய்டு



  • ஐடி ரெய்டு வழக்கமானதுதான் வைத்திலிங்கம் எம்.பி பேட்டி



  • சோதனையின் போது கோ பூஜை நடத்திய டிடிவி தினகரன்



  • புதுவை அருகே ஆரோவில்லில் உள்ள தினகரன் பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை



  • தஞ்சையில் நடராஜன், திருச்சியில் இளவரசி சம்பந்தி வீட்டில் ரெய்டு: புதுகை நிர்வாகி வீட்டிலும் சோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]