இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோயம்பேடு வணிக வளாகத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம்: தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

11/7/2025 3:56:20 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்காக சோமு உட்பட 12 பேரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. எதற்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்கு பயன்படுத்தாததால், நிலத்தை திருப்பி அளிக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2013ல் நிலத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நிலத்தை திருப்பி அளிக்காததால் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறையின் அப்போதைய செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் விஜய ராஜ்குமார் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த அக்டோபர் 12ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 3 வாரங்களில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் விற்ற இடம் இல்லை எனவும் மாற்று இடம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று அரசை எதிர்பார்த்து கொண்டிருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் மக்கள் நீதிதுறையின் மீது நம்பிக்கை இழந்து, வேறு வழியை நாடக்கூடும். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமை செயலாளருக்கு தெரியுமா? என்று கேட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கில் நாளை(இன்று) தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் வீட்டு வசதி முன்னாள் செயலாளர்  தர்மேந்திர பிரதாப் யாதவ், தற்போதைய முதன்மை செயலாளர் கிருஷ்ணன், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் விஜய ராஜ்குமார் ஆகியோரும் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதித்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப், முதன்மை செயலாளர் கிருஷ்ணன் உள்பட 4 அதிகாரிகள் இன்று காலை ஐகோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகள், அட்வகேட் ஜெனரலிடம், இந்த வழக்கு 2013ல் போடப்பட்ட வழக்கு. ஏற்கனவே இருந்த வீட்டுவசதித்துறை செயலாளர் இந்த விஷயத்தை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதனால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், தற்போது மனுதாரர் கூறும் இடத்தில் காலியிடம் இல்லை. மாற்று இடம் தருவது குறித்து முடிவெடுக்கிறோம் என்று பதில் அளித்தார். அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், அதே இடத்தில் காலியிடம் உள்ளது என்றார். இதைகேட்ட நீதிபதிகள் மாற்று இடம் தருவது குறித்து நாளை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

மேலும் சில
  • சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு



  • மிடாஸ் கோல்டன் மதுபான ஆலையில் சோதனை



  • மன்னார்குடியில் தினகரன், திவாகரன் வீடுகள், கல்லூரியில் ஐ.டி ரெய்டு



  • கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை ரெய்டு



  • சசிகலா வக்கீல் வீட்டில் சோதனை



  • அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் வீட்டில் ரெய்டு



  • ஐடி ரெய்டு வழக்கமானதுதான் வைத்திலிங்கம் எம்.பி பேட்டி



  • சோதனையின் போது கோ பூஜை நடத்திய டிடிவி தினகரன்



  • புதுவை அருகே ஆரோவில்லில் உள்ள தினகரன் பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை



  • தஞ்சையில் நடராஜன், திருச்சியில் இளவரசி சம்பந்தி வீட்டில் ரெய்டு: புதுகை நிர்வாகி வீட்டிலும் சோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]