காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
11/7/2025 3:10:08 PM
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், கண்டி பகுதியில் தீவிரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். வீரர்களை கண்டதும், தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.இருதரப்பினர் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது. இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார். அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் எடுக்கப்பட்டன. இன்னும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.