இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: தினகரன்
11/6/2025 4:53:41 PM
தர்மபுரி: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.தர்மபுரியில் இன்று காலை டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது தமிழகத்தில் இடிஅமீன் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி பற்றி கருத்து மற்றும் விமர்சனம் செய்தால் சிறைக்கு அனுப்புகின்றனர். மக்களுக்கு பணியாற்றுகிறோம் என்ற நினைப்பில் பேசுவதில்லை. மிரட்டல் அதிகம் உள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவரை கைது செய்துள்ளனர். அதற்கு பதில் மானநஷ்டஈடு கேட்டிருக்கலாம். கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை.
தேர்தல் வந்தால் அதிக இடங்களில் அதிமுக அம்மா அணி வெற்றி பெறும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
இரட்டை இலை சின்னம் தீர்ப்புக்காக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தால் அது தவறு. இரட்டை இலை எங்களுக்கு கிடைக்காதபட்சத்தில், நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி ெபறுவோம். மீண் டும் இரட்டை இலையை மீட்டெடுப்போம். ஏரி, குளங்களை தூர்வாராமல் கஜானாவை தூர் வாருகின்றனர். டெங்குக்கு கூடுதல் கவனம் செலுத்தாததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தற்போது ஆட்சியாளர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும்போது அவர்களுடைய நிலை தெரியும். இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.