இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

5 கோடி கோயில் சிலை கொள்ளை சென்னை, காஞ்சியை சேர்ந்த 2 பேர் அதிரடி கைது

11/6/2025 4:48:48 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

திருச்சி: நெல்லை மாவட்டம் சிவன் கோயிலில் ரூ.5 கோடி மதிப்பிலான சிலை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 3  பேர் கைது செய்யப்பட்டனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அத்தாளநல்லூர் கிராமத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 1,600 ஆண்டு பழமையான மூன்றீஸ்வரமுடையார்  கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஏராளமான பஞ்சலோக திருமேனிகளும், தொன்மையான கற்சிலைகளும் இருந்தன.  கோயிலின் வெளிபிரகார வாயிலில் இருந்த பழமை வாய்ந்த 2 துவாரபாலகர் கற்சிலைகளை 1994ம் ஆண்டு டிசம்பரில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்றுவிட்டனர். நெல்லை மாவட்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஆனால் சிலைகளை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு போலீஸ்் நிலையங்களில் 133 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள்  அனைத்தையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க வசதியாக திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில் புதிதாக சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், 23 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கொள்ளைபோன 2 கற்சிலைகளும், குற்றவாளிகளும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். திருடப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.நெல்லை மாவட்டம் அத்தாளநல்லூர் ஊர் முக்கியஸ்தர்கள் அந்த 2 சிலைகளை இணையதளம் வாயிலாக பார்த்து அடையாளம் காட்டினர். கொள்ளை தொடர்பாக  காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தை சேர்ந்த லெச்சு (எ) லெட்சுமி நரசிம்மன்(53), இவரது கூட்டாளிகளான சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஊமைத்துரை(68),  தஞ்சையை சேர்ந்த அண்ணாதுரை(59) ஆகிய 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட 2 சிலைகளையும்  சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் மூலம் ரூ.4.98 கோடிக்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து 3  பேரையும் நேற்று போலீசார் கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 2 சிலைகளையும் தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு போலீசார் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக கூடுதல் டிஎஸ்பி இளங்கோ, டிஎஸ்பி கனகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ்சந்திரகபூரிடம் ஐஜி.பொன்மாணிக்கவேல் சில நாட்களுக்கு முன்பு பல மணி நேரம் விசாரணை நடத்தினார்.  இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் 23 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையில் கொள்ளை போன சிலைகள் பற்றி தெரியவந்தது.

மேலும் சில
  • டிச. 2ல் கார்த்திகை தீபம் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரம்



  • 50,000 லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு: வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்



  • கந்து வட்டி கொடுமை மாஜி கவுன்சிலர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார், ஆர்ஐ சஸ்பெண்ட்



  • வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: 4 பேர் கைது



  • புறநகர் பகுதிகளில் பைக் திருடிய 2 பேர் கைது: 7 பைக் பறிமுதல்



  • மதுரவாயலில் 50 ஆயிரம் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது



  • திருத்தணி அருகே துணிகரம் கத்தியால்வெட்டி தம்பதியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு



  • கந்து வட்டி வசூலித்தவர் கைது



  • கூடுவாஞ்சேரி அருகே வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறுமி மீட்பு: காப்பக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]