இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

செய்த தவறுக்கு பிராயசித்தமாக யோகியின் தாஜ்மகால் பயணம் இந்திய கம்யூனிஸ்ட் தாக்கு

10/27/2017 4:12:26 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: முதல்வர் யோகியின் தாஜ்மகால் பயணம் செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையிலாக அமைந்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிண்டல் அடித்துள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தாஜ்மகால் சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதியை துடைப்பத்தால் சுத்தம் செய்தார். முன்னதாக பாஜ தலைவர்கள் பலரும் தாஜ்மகால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சூழலில் நேற்று யோகியின் தாஜ்மகால் பயணம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதுல் அஞ்சான் கூறுகையில், 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று சின்னமான தாஜ்மகால் குறித்து பாஜ தலைவர்கள் கூறியதை நினைத்து பார்க்க வேண்டும். அதே போல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேட்டியளித்த யோகி கூறுகையில், உத்தரபிரதேசத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் தாஜ்மகால் பெயரை மாற்றுவோம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது தாஜ்மகால் சென்றதன் மூலம் தனது தவறை சரி செய்து கொண்டார்.

அவரது தாஜ்மகால் பயணம் தவறுக்காக பிராயசித்தம் தேடும் யாத்திரையாக அமைந்துள்ளது. தாஜ்மகாலின் உண்மையான வரலாறு குறித்து வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் நூறாண்டுகளுக்கு முன்பே மிகவும் தெளிவாக எழுதி சென்றுள்ளனர். அப்படி இருந்தும் பாஜவின் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜ எம்பிக்கள், அமைச்சர்கள் அனைவரும் தாஜ்மகால் ஒரு இந்து கோயில் தான் என்ற புரளியை தொடர்ந்து பேசி வருகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்லும் தாஜ்மகாலை முதல்வர் யோகி சென்று பார்வையிட்டதன் மூலம் அவர் பிராயசித்தம் தேடிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்

மேலும் சில
  • உ.பி.யில் அவலம் ஆம்புலன்ஸ் வராததால் சாலையில் பிரசவித்த பெண்



  • பாஜ எங்களது முதல் எதிரி: சிவசேனா எம்பி கடும் தாக்கு



  • வாலிபரின் வயிற்றில் இருந்த 600 ஆணிகள் அகற்றம்



  • 2019 லோக்சபா தேர்தலில் கண்ணையா குமார் போட்டி: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு



  • விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு



  • இமாச்சல் பிரதேசத்தில் பாஜ அதிருப்தி தலைவர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்



  • செல்போன் ஆதார் இணைப்பு விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் தனிநபராக வழக்கு தொடர மம்தா முடிவு



  • மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடு சென்ற சவுகான் பயணத்தால் ம.பி.க்கு என்ன பயன்?



  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 28 சதவீதத்திற்கும் குறைவு : 9 மாநிலங்களில் ஐகோர்ட்களில் பெண் நீதிபதிகளே கிடையாது



  • டெல்லி சென்ற விமானத்திற்கு மிரட்டல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]