இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வயல் வழியாக அமைச்சர் வாகனம் சென்றதால் சேதம்: விவசாயிக்கு 4 ஆயிரம் வழங்கிய பாஜ அமைச்சர்

10/27/2017 4:10:55 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உழுது விதைக்கப்பட்ட வயல் வழியாக பாஜ அமைச்சரின் வாகனங்கள் சென்றதால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கோரிய விவசாயிக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மை நாட்களாக அங்கு பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு ஆக்ரா அருகே கிராமத்தில் பாஜ அமைச்சர் ஜெய் குமார் சிங் மற்றும் அவரை தொடர்ந்து வந்த வாகனங்கள் வயல் வழியாக சென்றதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்ரா அருகே உள்ள ஜலாவுன் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் அண்மையில் வயலை உழுது பயிர் செய்வதற்காக விதைகளை தூவியிருந்தார். கடந்த புதன்கிழமை அமைச்சர் ஜெய்குமார் சிங் மற்றும் அவரை பின்தொடர்ந்து வந்த ஏராளமான பாதுகாப்பு வாகனங்கள் ஆதரவாளர்கள் வாகனங்கள் உழுது விதைக்கப்பட்ட வயல் வெளியின் மீது சீறி பாய்ந்து சென்றுள்ளன. இதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

அடுத்தடுத்து வாகனங்கள் சென்றதால் தனது வயலில் தூவப்பட் விதைகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டதாக வேதனை தெரிவித்தார். எனவே தனக்கு பயிர் இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  உடனே தகவல் அறிந்த அமைச்சர் உடனடியாக விவசாயியை அழைத்து அவரது ரூ.4 ஆயிரத்தை சட்டை பையில் திணித்தார். இதை கண்டு விவசாயி மேலும் அதிர்ச்சி அடைந்தார். தற்போது இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக  கடந்த ஜூலை 11ம் தேதி தனது முதல் பட்ஜெட்டின் போது முதல்வர் யோகி அறிவித்திருந்தார்.  அதில் விவசாயி ஒருவருக்கு ரூ.1 கடன் தள்ளுபடி செய்ததாக தகவல் வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் யோகி அரசு அக்கறை காட்டி வருவதாக மாநில நிதி அமைச்சர் ராஜேஸ் அகர்வால் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் சில
  • உ.பி.யில் அவலம் ஆம்புலன்ஸ் வராததால் சாலையில் பிரசவித்த பெண்



  • பாஜ எங்களது முதல் எதிரி: சிவசேனா எம்பி கடும் தாக்கு



  • வாலிபரின் வயிற்றில் இருந்த 600 ஆணிகள் அகற்றம்



  • 2019 லோக்சபா தேர்தலில் கண்ணையா குமார் போட்டி: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு



  • விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு



  • இமாச்சல் பிரதேசத்தில் பாஜ அதிருப்தி தலைவர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்



  • செல்போன் ஆதார் இணைப்பு விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் தனிநபராக வழக்கு தொடர மம்தா முடிவு



  • மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடு சென்ற சவுகான் பயணத்தால் ம.பி.க்கு என்ன பயன்?



  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 28 சதவீதத்திற்கும் குறைவு : 9 மாநிலங்களில் ஐகோர்ட்களில் பெண் நீதிபதிகளே கிடையாது



  • டெல்லி சென்ற விமானத்திற்கு மிரட்டல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]