இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

டி.பி.சத்திரம் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்றவர்கள் கைது

10/27/2017 4:05:09 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

கீழ்ப்பாக்கம்: சென்னையில் அண்ணாநகர், அயனாவரம், அமைந்தகரை, டி.பி.சத்திரம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் கமிஷனர் சாரங்கன், கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் மேற்பார்வையில், டி.பி.சத்திரம் பிரதான சாலை பகுதிகளில் நேற்று மாலை தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது 5-வது குறுக்கு தெருவில் ஒருவர் பைக்கில் வந்து, ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்தார். அந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (45) என்பதும், இவர் சென்னை நகரில் ஒரு நம்பர் லாட்டரியின் மொத்த வியாபாரியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவர் பைக்கில் சென்னை நகரை சுற்றி வந்து, சில்லறை வியாபாரிகளிடம் லாட்டரி விற்பனை செய்து வருவது தெரிந்தது.

இதேபோல், டி.பி.சத்திரத்தில் அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் கண்காணித்தனர். குடியிருப்பில் இருந்து கஞ்சா பொட்டலங்களுடன் வெளியேறிய சந்திரசேகரன்(23) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சிமெட்ரி ரோடு ‘பி’ பிளாக்கை சேர்ந்த தனராஜ்(35) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்நிலையில், சென்னை நகர் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய லோகநாதன் (30) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பெயின்டருக்கு சரமாரி வெட்டு: பிரபல ரவுடி கைது



  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை



  • அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது: வேலூர் மாநகராட்சி கமிஷனர் மீது வழக்கு



  • ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு



  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 100 பவுன் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்



  • திருமுல்லைவாயலில் அபார்ட்மென்டில் பைக்குகள் எரிப்பு



  • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு



  • வீடுகளில் திருடிய 2 சிறுவர்கள் கைது



  • ரூ.1.44 லட்சம் கடனுக்காக ரூ.10 லட்சம் வீட்டை அபகரித்த கந்துவட்டிக்காரர் கைது



  • 10 ஆண்டுகளாக மனோவசியத்தில் ஈடுபட்டு 50 பெண்களை மயக்கி உல்லாசம் : சேலம் மாந்திரீகர் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]