காதல் தோல்வி, நீட் தேர்வு, விவசாயிகளுக்கு ஆதரவாக செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
10/26/2017 4:07:03 PM
சென்னை : காதல் தோல்வி, நீட் தேர்வு ரத்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு என்று கூறி வாலிபர் ஒருவர் 200 அடி உயர செல்போன் டிவரில் ஏறி 4 மணி நேரமாக தற்ெகாலை மிரட்டல் விடுத்த சம்பவம் பட்டினப்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ராக்கி ராஜா(29). இவர் நிஷா என்ற ெபண்ணை காதலித்து வந்ததுள்ளார். ஆனால் இவரது காதலை நிஷா ஏற்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராக்கி ராஜா இன்று காலை 6.30 மணி அளவில் பட்டினப்பாக்கம் மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகம் பின் புறம் உள்ள 200 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். செல்போன் டவரில் “I am so very sorry Baby” என்ற வாசகம் அடங்கிய பேனரை கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டினப்பாக்கம் போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை மைக் மூலம் கீழே இறங்குமாறு கேட்டனர். அதற்கு நான் கீழே இறங்க மாட்டேன் என்று கூறி போலீசாருக்கு சில கோரிக்கைகளை வைத்தார்.
முதல் கோரிக்கையாக நீட் தேர்வு ரத்த செய்ய வேண்டும், அனிதா மரணம் குறித்து நான் குறும் பட எடுக்க வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்ைகயும் எடுக்க வில்லை. மேலும் என்னுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேறும் வரை நான் கீழே இறங்க மாட்டேன். அதேபோல் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வந்து என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை என்னுடைய போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று கோரிக்கை வைத்தார். அப்போது போராட்டம் நடத்திய ராக்கி ராஜாவிடம் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். ஆனால் அந்த வாலிபர் போலீஸ் கமிஷனர் இங்கு வந்தால் தான் நான் கீழே இறங்குவேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டார். இதற்கிடையே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செல்போன் டவர் சுற்றிலும் வலை கட்டப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஒரு தீயணைப்பு வீரர் மட்டும் செல்போன் டவரில் ஏறி வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றார்.
உடனே வாலிபர் என்னிடம் யாரும் வரகூடாது அப்படி வந்தால் நான் கீழே குதித்து தற்கொைல செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டல் விடுத்தால் இதனால் செய்வது அறியாமல் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தவித்தனர். வாலிபரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து அவர் 100 அடிக்கு கீழே இறங்கினார். பின்னர் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இந்த வாலிபரை பாதுகாப்பாக கீழே இறங்கினர். மீட்கப்பட்ட வாலிபரை போலீசார் அழைத்து ெசன்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபப்பு
செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஜெ. மரணம் குறித்த விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து 10 மாதங்கள் ஆகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கூட தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக புதிய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை நீதிபதி அலுவலகத்திற்கு வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. விரைந்து விசாரணை நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும். காலத்தாமதத்திற்கு நான் நீதிபதியை கண்டிக்கிறேன்.
சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பிய வாலிபர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய வாலிபர் தனது பேஸ்புக் பக்ககத்தில் தனது போராட்டத்தை நேரலையாக ஒளிபரப்பினர். மேலும் வாட்ஸ் அப் மூலமும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை தகவல்களை போலீசாருக்கு தனது கோரிக்கைகளை முன் வைத்தார்.