இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா

10/13/2017 3:39:56 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

ஐதராபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடியாக கவுகாத்தியில் நடந்த 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
2 போட்டிகள் முடிவில் 1-1 என சமநிலை வகிக்க 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கவுகாத்தியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. கேப்டன் கோஹ்லி டி.20போட்டியில் முதன் முறையாக டக் அவுட் ஆனார். ரோகித், தவான், டோனி, மணிஷ்பாண்டே என முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இதனால் கூடுதல் கவனத்துடன் இன்று களம் இறங்க வேண்டி உள்ளது. மணிஷ் பாண்டேவுக்கு பதில் இன்று லோகேஷ் ராகுல், சஹாலுக்கு பதில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் ஆஸ்திரேலியா அணி உற்சாகத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 7 டி.20 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில், கவுகாத்தியில் வெற்றி வெற்றது தான் அதற்கு காரணம். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பேரென்டோர்ப், 4 விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர்களை மிரள செய்தார். ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் டி.20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களம் இறங்குகிறது. இரு அணிகளும் வெற்றிபெற மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

மழை மிரட்டல்   ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

முதல் டி.20 போட்டி இந்த மைதானத்தில் இதற்கு முன் சர்வதேச டி.20 போட்டி நடந்ததில்லை. இன்று தான் முதல் போட்டி நடக்கிறது. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் நடந்துள்ளன. கவுகாத்தி மைதானம் போன்று இங்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



  • தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்: யுவராஜ் சிங் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]