இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் கருகி பலி

10/13/2017 3:39:13 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நின்ற கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததால் தீப்பற்றியது. இதில் டிரைவர் பரிதாபமாக கருகி பலியானார். திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை ரோட்டைச் சேர்ந்தவர் லூர்துசாமி(62). இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கன்டெய்னர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று துறைமுகம் கேம்ப் 1 பகுதியில் இருந்து லாரியில் கன்டெய்னரை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் - நெல்லை ரோட்டில் உள்ள தனியார் குடோனுக்கு சென்று கொண்டிருந்தார். சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் லாரியை லூர்துசாமி நிறுத்தினார். அப்பகுதியில் தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பியில் கன்டெய்னர் உரசியபடி நின்றுள்ளது.
இதனை கவனிக்காத லூர்துசாமி கீழே இறங்கி சென்று கை, கால்களை கழுவி விட்டு மீண்டும் லாரியில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் பாய்ந்த ஹைவோல்டேஜ் மின்சாரம் டிரைவர் லூர்துசாமி மீது பாய்ந்துள்ளது. இதில் லாரியின் டயர் மற்றும் பக்கவாட்டு பகுதி எரிந்ததால் லூர்துசாமி உடலிலும் தீப்பற்றி கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். லூர்துசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை



  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு



  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்



  • புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்



  • வரும் நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: செங்கோட்டையன் தகவல்



  • தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?: ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு



  • டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி



  • சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது குறைந்த விலையில் தின்பண்டம்: அரசிடம் வலியுறுத்த விஷால் முடிவு



  • ஊதிய உயர்வு கோரி காட்டாங்கொளத்தூரில் 3வது நாள் போராட்டம் தனியார் மருத்துவமனை நர்ஸ்கள் கைகளை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரி தாக்கு



  • துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: 85 பதவிக்கு 4199 பேர் போட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]