இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா

10/12/2025 3:20:26 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

பெங்களூரு: ஆசிய கோப்பை கால்பந்து தொடர், 2019ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்ற தகுதி சுற்று போட்டி ஒன்றில், இந்தியா-மக்காவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 28வது நிமிடத்தில் ரவ்லின் போர்ஜெஸ், 60வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி, 90+2வது நிமிடத்தில் ஜிஜே ஆகியோர் இந்திய அணிக்கு கோல் அடித்தனர். இதில், ஜிஜே அடித்த கோலுக்கும், கேப்டன் சுனில் சேத்ரி உதவி செய்தார். இது தவிர, மக்காவ் வீரர் லாம் செங், 70வது நிமிடத்தில் சுய கோல் ஒன்றையும் அடித்தார். மக்காவ் அணிக்கு 37வது நிமிடத்தில் நிக்கோலஸ் டார்ரோ மட்டும் ஒரு கோல் அடித்தார்.
 
தகுதி சுற்றின் ‘ஏ’ பிரிவில், இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தியாவுடன், மியான்மர், கிர்கிஸ்தான், மக்காவ் ஆகிய அணிகளும் ‘ஏ’ பிரிவில் உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்தியா தனது முதல் மூன்று போட்டிகளில், மியான்மரை 1-0, கிர்கிஸ்தானை 1-0, மக்காவ்வை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. தற்போது மக்காவுக்கு எதிரான 2வது போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், தகுதி சுற்று போட்டிகளில், இந்தியா தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன. நவம்பர் 24ம் தேதி மியான்மருடனும், அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கிர்கிஸ்தானுடனும், இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

தகுதி சுற்று ‘ஏ’ பிரிவில், இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தற்போதே இந்தியா தகுதி பெற்று விட்டது. ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெறுவது இது 4வது முறையாகும். முன்னதாக 1964, 1984, 2011ம் ஆண்டுகளில், ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா விளையாடியுள்ளது. இதில், 1964ம் ஆண்டு பைனல் வரை இந்தியா முன்னேறியது. 1984ம் ஆண்டு தனது பிரிவில் கடைசி இடத்தையே இந்தியாவால் பிடிக்க முடிந்தது. 2011ம் ஆண்டு கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தொடரிலும், ஆஸ்திரேலியா, தென் கொரியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளிடம் தோல்வி கண்ட இந்தியா, தனது பிரிவில் கடைசி இடத்தையே பிடித்தது. எனினும் தற்போது இந்திய அணி வெகுவாக முன்னேற்றம் கண்டிருப்பதால், 2019ம் ஆண்டில் சாதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சுனில் சேத்ரி மகிழ்ச்சி

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில், ‘’2015ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு எங்களால் தகுதி பெற முடியவில்லை. அது இன்னமும் என்னை வேதனைப்படுத்துகிறது. தற்போது தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்துள்ளோம். 2019ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடுவோம்’’ என்றார்.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



  • தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்: யுவராஜ் சிங் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]