இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்

10/8/2025 5:12:42 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுலில் இருந்து விலகிய மூத்த தலைவர் முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு திரிணாமுலுக்கும் பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையொட்டி திரிணாமுல் தலைவர்கள் பலர் மீதும் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை சிபிஐ பதிவு செய்து கைது செய்தது. மம்தாவின் நெருக்கமான தலைவராக இருந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் ராயை பாஜ குறிவைத்தது. இதையடுத்து அவருக்கு பாஜ மேலிட தலைவர்களுடன் ரகசிய தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி மம்தா உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் பாஜவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜ தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரையும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. துர்கா பூஜை முடிந்த பிறகு திரிணாமுலின் ராஜ்யசபா எம்பி பதவியையும் முகுல் ராய் ராஜினாமா செய்கிறார். இதற்கிடையில் டெல்லியில் பாஜ உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை முகுல் ராய் சந்தித்து பேசினார். அண்மை காலமாக பாஜ மீது கரிசனத்துடன் முகுல் ராய் பேச்சு காரணமாக அவர் பாஜவில் இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்கள் வர உள்ளன. எனவே அதில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் தனிக்கட்சி தொடங்க முகுல் ராய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து நேற்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் அனைத்து இடங்களிலும் எனது ஆதரவாளர்களை போட்டியிட செய்வேன். திரிணாமுலின் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் தனது ராஜ்யசபா எம்பி பதவியை முகுல் ராய் ராஜினாமா செய்து கடிதத்தை கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலங்கானா முதல்வர் பேச்சு



  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை சிறையில் தள்ளுவோம்: உ.பி. பாஜ அமைச்சர் பேச்சால் சர்ச்சை



  • ‘சிபிஐ பெயரைக் கூறி தொடர்ந்து மிரட்டுகிறார்’ கவர்னர் கிரண்பேடி மீது புதுவை அமைச்சர் குற்றச்சாட்டு: ஜனாதிபதிக்கு கடிதம்



  • டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்



  • பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன் பெற்றார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • அரசுக்கு கட்டணம் பாக்கி வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை நிராகரிப்பு



  • அரசியல் கொலைகளை கண்டித்து டெல்லியில் பேரணி கேரளாவில் பாஜ செல்வாக்கை தடுக்க ஆளும் சிபிஎம் நினைக்கிறது: அமித்ஷா குற்றச்சாட்டு



  • கீழ் நீதிமன்றங்களில் பெண்கள் வழக்கு தொடர்வது மிகவும் குறைவு: ஆந்திரா முதலிடம்; குஜராத் கடைசி



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : ம.பி. முதல்வர் சவுகான் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]