இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்திய அணியின் கேப்டன் யார் இந்த அமர்ஜித் சிங்?

10/6/2025 3:01:00 PM
திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம் ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்

பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் அமர்ஜித் சிங். பிபா உலக கோப்பை ஒன்றில், இந்திய அணியை வழி நடத்திய முதல் கேப்டன் என்பதால், அமர்ஜித் சிங்கின் பெயர் வரலாற்றில் இடம் பெற போகிறது. வட கிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரை சேர்ந்தவர்தான் அமர்ஜித் சிங். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தை சந்திரமணி சிங் விவசாயி. அவ்வப்போது கார்பெண்டர் வேலையும் செய்வார். தாய் அசங்க்பி தேவி மீன் விற்பனை செய்பவர். தினமும் ₹250-300 வரைதான் வருமானம் வரும். இந்த பணத்தை ெகாண்டுதான் குடும்பத்திற்கான செலவுகளை சமாளித்து வந்துள்ளனர். அமர்ஜித் சிங் மிட் பீல்டராவார். இந்திய யு-17 அணியின் பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மடோஸ், 4 வீரர்களை தேர்வு செய்து, அவர்களை கேப்டன் பதவிக்கு போட்டியிட வைத்தார். அவர்களில் அமர்ஜித் சிங்கை தங்களின் கேப்டனாக, 27 பேர் கொண்ட இந்திய அணி ஒருமனதாக தேர்வு செய்தது. ‘’இந்த வயதில் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அணியை வழிநடத்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். என்னை தவிர வேறு யாரையாவது, எனது அணி வீரர்கள் கேப்டனாக தேர்வு செய்திருந்தாலும் கூட நான் மகிழ்ச்சிதான் அடைந்திருப்பேன். இந்திய அணியில் நிறைய கேப்டன்கள் உள்ளனர். ஆனால் வழிநடத்த ஒருவர்தான் தேவை என்பதால் என்னை தேர்வு செய்துள்ளனர். முதல் போட்டிக்கு 60 ஆயிரம் ரசிகர்கள் வரவுள்ளனர். அதுதவிர நாடு முழுவதும் ரசிகர்கள் போட்டியை கண்டு ரசிப்பார்கள். எப்போதுமே நமக்கு ஆதரவு அளிப்பவர்கள் தேவை. அது முக்கியமானதும் கூட. கடினமாக முயற்சி செய்து சிறப்பாக விளையாடுவோம். போட்டியின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார் அமர்ஜித் சிங்.

மேலும் சில
  • பிபா யு-17 உலக கோப்பை இன்று தொடக்கம் ரசித்து விளையாடுங்கள் கனவுகளை துரத்துங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து



  • பிபா யு-17 உலக கோப்பை நாளை தொடக்கம் : இந்திய அணி சிறப்பாக செயல்படும்



  • ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு டி20 போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவோம் : ஆஸ்திரேலிய வீரர் ஹென்ரிக்ஸ் உற்சாகம்



  • பேரழிவை ஏற்படுத்திய இர்மா, மரியா புயல்கள் : நிதி திரட்ட காட்சி கிரிக்கெட் ; பொல்லார்டு, சம்மி விளையாடுகின்றனர்



  • 5வது புரோ கபடி லீக் : தமிழ்தலைவாஸ் தொடர்ந்து 4வது தோல்வி



  • இந்தியாவுக்கு எதிராக ஆட ஆஸி. வீரர்களுக்கு பயம் : பயிற்சியாளர் புலம்பல்



  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றும் : கவாஸ்கர் கணிப்பு



  • ஆஸி. தோல்வி ஏன்? சேவாக் விளக்கம்



  • சிறந்த கேப்டனாக இருப்பதற்கான திறன்களை பெற்று விட்டார்’: விராட் கோஹ்லிக்கு கங்குலி பாராட்டு



  • முதல் டெஸ்ட்டில் இலங்கை வெற்றி : நல்ல பார்ட்னர்ஷிப் அமையாதது அழுத்தத்தை ஏற்படுத்தி விட்டது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]