இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

₹20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் காரில் கடத்தல்: விபத்தில் சிக்கியதால் அம்பலம்

10/6/2025 2:58:48 PM
திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம் ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்

புதுக்கோட்டை: மதுரையிலிருந்து திருச்சி நோக்கி இன்று காலை ஒரு கார் வந்துகொண்டிருந்தது. காலை 6.45மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பைபாஸ் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் கார் திரும்பியபோது எதிரே திருச்சியிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. காரில் வந்த 4 பேர் காயமடைந்தனர். அப்போது  ரோந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம்  காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் காரை போலீசார் அப்புறப்படுத்தியபோது காருக்குள் மரகதலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரோந்து போலீசார் அளித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் அங்கு வந்து மரகதலிங்கத்தை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி புதுக்கோட்டை மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவரும் விராலிமலைக்கு விரைந்துவந்தார். மரகத லிங்கம் மூன்றரை அடி உயரமும், ஏழரை கிலோ எடையும் கொண்டது. இதன் மதிப்பு ரூ.20கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.  இதை அவர்கள் கடத்தி வந்தபோது விபத்து ஏற்பட்டதால் மரகதலிங்கம் சிக்கியது. மேலும் போலீசார் வழக்கு பதிந்து மரகதலிங்கத்தை கடத்தி வந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், மரகத லிங்கத்தை எங்கிருந்து கடத்தினர், யாருக்காக கொண்டு சென்றனர் என சிகிச்சை பெற்றுவரும் கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் சில
  • முதியவர் கொலை:3 கொள்ளையர்கள் கைது



  • பெரம்பூரில் பரபரப்பு : பெண் டாக்டருக்கு அரிவாள் வெட்டு



  • சாராய வியாபாரியாக இருந்து ரவுடியான பிரபல தாதா ஸ்ரீதர் தற்கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்



  • திருத்தணியில் இளம்பெண் கடத்தல்?



  • வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது : நகை, செல்போன் பறிமுதல்



  • பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் : பண்ணை வீட்டில் திருட வந்த கொள்ளையன் அடித்து கொலை



  • வீடு புகுந்து இளம்பெண் படுகொலையில் கணவர் உட்பட 10 பேரிடம் விசாரணை



  • கள்ளக்காதலை விட மறுத்த தந்தை அடித்து கொலை மகன்களுக்கு வலைவீச்சு



  • வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது : நகை, பைக் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]