ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை ₹1.36 கோடிக்கு ஏலம்
10/6/2025 2:56:53 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய தலைமுடி 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்க்கெட்டிங் துறை அலுவலகத்தில் நேற்று மாலை ஆன்லைனில் ஏலத்தில் வைக்கப்பட்டது. முதல் ரக தலைமுடி 1 கிலோ ₹22,494 என 8,800 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டது விற்கப்படவில்லை. 2வது ரகம் 1 கிலோ என ₹17,223 என 48,900 கிலோ வைக்கப்பட்டதில் 500 கிலோ தலைமுடி ₹86.11 லட்சம் ஏலம் போனது. 3வது ரகம் 1 கிலோ ₹2,833 என 24,500 கிலோ வைக்கப்பட்டது. இதில் 1,600 கிலோ தலைமுடி மூலம் ₹45.41 லட்சம் வருவாய் கிடைத்தது. 4வது ரகம் 1 கிலோ ₹1,194 என 1,700 கிலோ தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டதில் 300 கிலோ தலைமுடி ₹3.59 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 5வது ரகம் 1 கிலோ ₹24 என்று 1,53,000 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் 2000 கிலோ தலைமுடி ₹48 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. 6வது ரகம் 1 கிலோ ₹5,462 என 6,300 கிலோ தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டது. இது விற்பனை ஆகவில்லை. மொத்தம் 4,400 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ₹1.36 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.