இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கெஜ்ரிவாலுடன் ஒரே மேடையில் பங்கேற்பு பாஜ நடவடிக்கை எடுத்தால் வரவேற்கிறேன்: யஷ்வந்த் சின்கா மீண்டும் சர்ச்சை பேச்சு

10/6/2025 2:48:38 PM
திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம் ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்

புதுடெல்லி: கெஜ்ரிவாலுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டதற்காக பாஜ என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை நான் வரவேற்கிறேன் என யஷ்வந்த் சின்கா பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அண்மையில் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது என்று பேசினார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைளை விமர்சித்த அவர் அடுத்த கட்டமாக காஷ்மீர் கொள்கையை விமர்சித்தார். போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை சிஆர்பிஎப்பிடம் ஒப்படைத்து விட்டு ராணுவம் வெளியேற வேண்டும் என திரியை கொளுத்தி போட்டார். இது பாஜவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எழுதிய ஆங்கில புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் யஷ்வந்த் சின்கா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 பேரும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

பின்னர் யஷ்வந்த் சின்கா நிருபர்களிடம் கூறுகையில், மணீஷ் திவாரியுடனும், கெஜ்ரிவாலுடனும் நான் ஒரே மேடையில் பங்கேற்றேன். இதற்காக பாஜ என்மீது நடவடிக்கை எடுத்தால் அதை நான் வரவேற்கிறேன். அந்த நாளை நான் வாழ்வின் மிக சிறந்த நாளாக கருதுவேன். என்னை பிரதமர் மோடி, மகாபாரதத்தில் வரும் சல்யன் என்று விமர்சித்தார். துரியோதனன் பேச்சை கேட்டு பாண்டவர்களிடம் இருந்து கௌரவர்கள் பக்கம் சென்றவர் சல்யன். துரியோதனனால்தான் அவர் கர்ணனுக்கு தேரோட்டியாக ஆனார் என்றும் யஷ்வந்த் சின்கா பதிலடி கொடுத்துள்ளார். யஷ்வந்த் சின்காவின் இந்த கருத்து மீண்டும் பாஜவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : ம.பி. முதல்வர் சவுகான் அதிரடி



  • மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு அருண் ஷோரி தாக்கு



  • ரயில் கட்டணம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்



  • இந்திய எல்லையில் உள்ள டோக்லாமில் சீனா மீண்டும் அத்துமீறல்



  • ரோஹிங்கியா விவகாரம் வங்கதேச எல்லையில் கூடுதல் கண்காணிப்பு



  • அசாம் அரசு மருத்துவமனையில் பரிதாபம் 22 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலி



  • ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை ₹1.36 கோடிக்கு ஏலம்



  • தோல்வியை ஒப்புக் கொண்டு ஆட்சியை காங்கிரசிடம் கொடுத்து விடலாம்: மோடிக்கு ராகுல் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]