இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரணை

10/6/2025 2:47:51 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி மாநில பாஜ செய்தி தொடர்பாளரும், வக்கீலுமான அஸ்வினி குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தல்களில் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 33 வது பிரிவை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டியது கட்டாயம். இதனால் அந்த வேட்பாளரை நம்பி வாக்களித்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதுடன் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது.

2 தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.  இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர் அந்த தொகுதியில் நடைபெறும் இடை தேர்தல் செலவை ஏற்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்கியது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சுப்ரீம் கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலங்கானா முதல்வர் பேச்சு



  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை சிறையில் தள்ளுவோம்: உ.பி. பாஜ அமைச்சர் பேச்சால் சர்ச்சை



  • ‘சிபிஐ பெயரைக் கூறி தொடர்ந்து மிரட்டுகிறார்’ கவர்னர் கிரண்பேடி மீது புதுவை அமைச்சர் குற்றச்சாட்டு: ஜனாதிபதிக்கு கடிதம்



  • டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்



  • பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன் பெற்றார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • அரசுக்கு கட்டணம் பாக்கி வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை நிராகரிப்பு



  • அரசியல் கொலைகளை கண்டித்து டெல்லியில் பேரணி கேரளாவில் பாஜ செல்வாக்கை தடுக்க ஆளும் சிபிஎம் நினைக்கிறது: அமித்ஷா குற்றச்சாட்டு



  • கீழ் நீதிமன்றங்களில் பெண்கள் வழக்கு தொடர்வது மிகவும் குறைவு: ஆந்திரா முதலிடம்; குஜராத் கடைசி



  • திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]