இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீரில் 3வது நாளாக பதற்றம்

10/6/2025 2:46:10 PM
திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம் ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்

நகர்: காஷ்மீரில் எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இன்றோடு இப்பகுதியில் 3வது நாளாக பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி இந்திய நிலைகள் மீதும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பூஞ்சில் உள்ள திக்வார் செக்டாரில் நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை இந்த தாக்குதல் நீடித்தது. கடந்த சில மணி நேரங்களுக்கு உள்ளேயே இந்த பகுதியில் மட்டும் இன்று அதிகாலைக்குள் பாகிஸ்தான் படையினர் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில்  இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் சண்டை நீடித்தது. ஆனால் இந்த  தாக்குதலில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என இந்திய ராணுவ  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த புதன் கிழமை எல்லையோர கிராமத்தை நோக்கி பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். நல்வாய்ப்பாக இதில் கிராமவாசிகள் யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர்.  அதே நேரத்தில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாகவே எல்லை பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் சில
  • திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை : ம.பி. முதல்வர் சவுகான் அதிரடி



  • மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு அருண் ஷோரி தாக்கு



  • ரயில் கட்டணம் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்



  • இந்திய எல்லையில் உள்ள டோக்லாமில் சீனா மீண்டும் அத்துமீறல்



  • ரோஹிங்கியா விவகாரம் வங்கதேச எல்லையில் கூடுதல் கண்காணிப்பு



  • அசாம் அரசு மருத்துவமனையில் பரிதாபம் 22 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலி



  • ஏழுமலையான் கோயிலில் தலைமுடி காணிக்கை ₹1.36 கோடிக்கு ஏலம்



  • தோல்வியை ஒப்புக் கொண்டு ஆட்சியை காங்கிரசிடம் கொடுத்து விடலாம்: மோடிக்கு ராகுல் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]