இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டெங்கு பாதிப்பு குறித்து கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

10/5/2025 3:32:31 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏராளமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திமுக செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ஆய்வு செய்து வருகிறார்கள். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே  ஸ்டான்லி மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். இன்று அவர் கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை  சந்தித்து ஆறுதல் கூறினார்.

மருந்துகள் தாராளமாக கிடைக்கிறதா என்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். காலை 9.30 மணிக்கு செம்பியம் வந்த அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு டெங்கு  மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை வார்டு வார்டாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பெண்கள், முதியோர், சிறுவர்,  சிறுமியர் ஆகியோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் பந்தர் கார்டன் பகுதிக்கு சென்று அங்குள்ள தனியார்  மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேரும், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அகரம் சோலையராஜா  தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து ஜி.கே.எம் காலனி 34 வது தெருவில் உயர் அழுத்த மின்  கம்பிகள் புதைவடகம்பிகளாக மாற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ரங்கநாதன் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப் முரளி, நாகராஜ் ஆகியோர் இருந்தனர்.

மேலும் சில
  • வாக்கி டாக்கி ஊழலில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரன் பதவியில் நீடிக்க கூடாது: தலைமை செயலாளரிடம் திமுக நேரில் வலியுறுத்தல்



  • தமிழகம் முழுவதும் போலீசாருக்கு ரேஷன் பொருட்கள் ‘கட்’



  • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு தடாலடி



  • குஜராத்தைப் போல தமிழகத்திலும் பா.ஜ. ஆட்சி அமைந்தால் சிறப்பாக இருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • ஹஜ் மானியத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்



  • பாஜ அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் இணைய வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல்



  • தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்



  • ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்



  • நடிகை ஸ்ருதி ஹாசன் மீது கன்னட நடிகர் கடும் தாக்கு



  • நான் ஸ்லீப்பர் செல்லா?: அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]