இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சாராய வியாபாரியாக இருந்து ரவுடியான பிரபல தாதா ஸ்ரீதர் தற்கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

10/5/2025 3:31:43 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி தர் (46). இவர் மீது நில அபகரிப்பு, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை, 8 கொலை முயற்சி வழக்குகள், 4 ஆள் கடத்தல் வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து,  நில உரிமையாளர்களை மிரட்டுதல், செம்மரம் கடத்துதல், ஆளில்லா சொத்துக்களை மிரட்டி வாங்குதல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் 5 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக நேற்று தகவல் வெளியானது. இவரது பின்னணி பற்றிய விவரம் வருமாறு: சாராய வியாபாரியாக இருந்து ரவுடியாக உருவெடுத்த ஸ்ரீதரின் சாம்ராஜ்யம் கொடிகட்டி  பறந்தது.  இதன் மூலம் அரசியலில் நுழைய நினைத்த அவர் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும் இருந்தார். காஞ்சிபுரம் பள்ளி ஒன்றின் தாளாளராகவும் இருந்தார். வழக்குகளின் பிடி இறுகவே வெளிநாட்டுக்கு தப்பிச்  சென்றார். இருப்பினும் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகள் மூலம் காஞ்சிபுரத்தில் பல கொலைகள் செய்துவருவதாக போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவரை தேடப்படும்  குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

சென்னை அமலாக்கத்துறை தரின் 500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. அவரது மனைவி குமாரி (42), மகன் சந்தோஷ்குமார் (24), மகள் தனலட்சுமி (27) உள்ளிட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி விமான  நிலையத்தில் ரெட் அலர்ட் செய்திருந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லண்டனில் பிபிஏ படித்து வரும் தரின் மகன் சந்தோஷ்குமார்  தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது  அவரை சிபிசிஐடி போலீசார் பிடித்தனர். காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் அதிமணி மற்றும் தனிப்படை போலீசார் அவரை காஞ்சிபுரம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்யும் சூழல் ஏற்பட்டது.  அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சின்ன காஞ்சிபுரம் அதிமுக முன்னாள் கவுன்சிலர், பெரிய காஞ்சிபுரத்தில் பிரபல தனியார் இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர்  மற்றும் அதிமுக பிரமுகர் ஒருவர் என தொடர்ந்து பலரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதற்கிடையில் அமலாக்கத்துறை மூலம் காஞ்சிபுரத்தில் பிரபல துணிக்கடை நிறுவனம் ரவுடி ஸ்ரீதர் மூலம் மிரட்டி வாங்கிய இடத்தையும் முடக்கியது. இதனால் பலவகையிலும் தருக்கு நெருக்கடி முற்றியது. இந்நிலையில், காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடிதர் கம்போடிய நாட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து எஸ்பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது,  கம்போடியா நாட்டில் தர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தற்கொலை செய்து கொண்டு இறந்தது தர்தானா என்பதை உறுதிப்படுத்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து  வருகிறோம் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதன்கிழமை இரவே தர் தற்கொலை தகவல் வெளியானதால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள எல்லப்பா நகரில் உள்ள தரின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் வந்து பார்த்துவிட்டு சென்றனர். தர்  வீட்டுக்கு யார், யார் வருகிறார்கள் என்பதைக் கண்காணிக்க உளவுத்துறை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதால் அவரின் வீட்டுக்கு யாரும் வரவில்லை. திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள அவரது பழைய வீட்டுக்கும் உறவினர்கள் யார்  யார் வருகிறார்கள் என்பதை கண்காணிக்கவும் போலீசார் திருப்பருத்திக்குன்றம் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். 6 மாவட்ட போலீசார் குவிக்க முடிவு: காஞ்சிபுரத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல்  தடுக்கும் வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதி, பாதி டீல்: காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த மாசாணமுத்து ஸ்ரீதருடன் கைகோர்த்துக் கொண்டு நீ பாதி நான் பாதி டீலிங் ஏற்படுத்திக் கொண்டார். இதனால் தரின் சாம்ராஜ்யம் வடமாவட்டங்களிலும் விரிவடைந்தது. இதற்கு  உபகாரமாக எஸ்பி மாசாணமுத்து மகனின் திருமணத்தை ஸ்ரீதரே முன்னின்று நடத்தியதாகவும் கூறப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளில் 75 சதவீதத்தினர் தருக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதற்கு முக்கிய  காரணம் போலீசார் வேலையை செய்து முடித்தால் ரூ.1000 எதிர்பார்த்தால் 10 மடங்கு உயர்வாக 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பாராம். இதுவே போலீசார் விசுவாசமாக செயல்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. பிடிக்க முயற்சி செய்த அதிகாரி: 1990களில் சாராய வியாபாரியாக தொடங்கி போலீசாரின் ஆசிர்வாதத்தால் பிரபல ரவுடியாக உருவெடுத்த தருக்கு காவல் துறையில் பலர் உதவியாக இருந்தனர். இதனால் அவரைப் பற்றி புகார்  கொடுக்க பலரும் பயந்துகொண்டு இருந்தனர். காஞ்சிபுரம் எஸ்பியாக வந்த விஜயகுமார் ஸ்ரீதரை பிடிப்பதில் தீவிரம் காட்டினார். இதை அறித்த தர் வெளிநாட்டுக்கு தப்பினார். இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஸ்ரீதரை பிடிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது கூட்டாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதன்பிறகு வந்த ஏடிஎஸ்பி நாத் இவ்வழக்கில் தீவிரம் காட்டினார். தரின் கூட்டாளிகளை கைது செய்வது, அவரின் தொடர்புகளை கண்டறிந்து தீவிர விசாரணை நடத்தியது, அமலாக்கத்துறை மூலம் அவரின் 150 கோடி  சொத்துக்களை முடக்க தீவிரம் காட்டியது என அவரின் அதிரடி நடவடிக்கைகளால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். இவ்வாறு அவரின் மீது பிடிஇறுகிக்கொண்டிருந்த நிலையில் தற்போது எஸ்பியாக உள்ள  சந்தோஷ் ஹதிமனி இந்த வழக்கில் தீவிரம் காட்டி ஸ்ரீதரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த தர் மனைவி  குமாரியை, அமலாக்கத் துறையினர் விமான நிலையத்தில் சுற்றிவளைத்து பிடித்து, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது 30 கோடி சொத்துக்களுக்கான பணப் பரிமாற்றம் வங்கியில் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீதர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.  இதனைத் தொடர்ந்து இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஸ்ரீதரைப் பிடிக்க நடவடிக்கைகள் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து மலேசியா சென்று அங்கிருந்து கம்போடியா சென்றுள்ளார். மகனிடம் விசாரணை,  மனம் உடைந்த தர்: மகனை துருவித்துருவி விசாரணை செய்ததில் மனம் உடைந்த தர், இவ்வளவு பணம், பொருள், சொத்துக்கள் இருந்தும் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என மன உளைச்சலில் இருந்ததாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பலவகையிலும் நெருக்கடி ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு வரமுடியவில்லை, பணம், பொருள், சொத்துக்கள், அடியாட்கள் என வாழ்ந்தும் என்ன பிரயோஜனம், தன் மகன், மகளுக்கு எந்த  போலீஸ் தொந்தரவும் இருக்கக் கூடாது என நினைத்த ஸ்ரீதருக்கு மகனிடம் விசாரணை என்ற செய்தியால் நிலைகுலைந்ததாகவும் இதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் சில
  • மயிலாப்பூரில் நள்ளிரவு பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: போதையில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தப்பினர்



  • ₹20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் காரில் கடத்தல்: விபத்தில் சிக்கியதால் அம்பலம்



  • முதியவர் கொலை:3 கொள்ளையர்கள் கைது



  • பெரம்பூரில் பரபரப்பு : பெண் டாக்டருக்கு அரிவாள் வெட்டு



  • திருத்தணியில் இளம்பெண் கடத்தல்?



  • வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது : நகை, செல்போன் பறிமுதல்



  • பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் : பண்ணை வீட்டில் திருட வந்த கொள்ளையன் அடித்து கொலை



  • வீடு புகுந்து இளம்பெண் படுகொலையில் கணவர் உட்பட 10 பேரிடம் விசாரணை



  • கள்ளக்காதலை விட மறுத்த தந்தை அடித்து கொலை மகன்களுக்கு வலைவீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]