இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது : நகை, செல்போன் பறிமுதல்

10/5/2025 3:30:21 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

பல்லாவரம்: சென்னை பம்மல், பொழிச்சலூர் சுற்றுவட்டாரப்  பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்து  நடைபெற்று வருவதாக சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அனகாபுத்தூர் ஆற்றுப்பாலம் அருகே  பல்லாவரம்-குன்றத்தூர் செல்லும் சாலையில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு பைக்கில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் வந்தது திருட்டு பைக்  என்பதும் போலீசாரின் கேள்விகளுக்கு பதற்றத்துடனும் முன்னுக்கு பின் முரணாகப் பதில் கூறியதால் காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். பிடிபட்ட நபர்கள் பம்மல், பொழிச்சலூரை சேர்ந்த லட்சுமணன் (23), சத்யா(21),  சீனிவாசன் (25) என்பதும் இவர்கள் வழிப்பறி கொள்ளை, செயின் பறிப்பு மற்றும் பைக் திருட்டையே தொழிலாக கொண்டிருப்பது தெரியவந்தது. பம்மல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியே நடந்து செல்லும்  வயதான மற்றும் இளம்பெண்களிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பு, இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து தாக்கி பணம் மற்றும் பைக் திருட்டு ஆகியவற்றை செய்ததாகவும், இதுதொடர்பாக பல்வேறு காவல்  நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த 4 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்களை போலீசார்  பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • மயிலாப்பூரில் நள்ளிரவு பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது: போதையில் இருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தப்பினர்



  • ₹20 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் காரில் கடத்தல்: விபத்தில் சிக்கியதால் அம்பலம்



  • முதியவர் கொலை:3 கொள்ளையர்கள் கைது



  • பெரம்பூரில் பரபரப்பு : பெண் டாக்டருக்கு அரிவாள் வெட்டு



  • சாராய வியாபாரியாக இருந்து ரவுடியான பிரபல தாதா ஸ்ரீதர் தற்கொலை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்



  • திருத்தணியில் இளம்பெண் கடத்தல்?



  • பிரபல ரவுடி ஸ்ரீதர் கூட்டாளி குண்டர் சட்டத்தில் கைது



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் : பண்ணை வீட்டில் திருட வந்த கொள்ளையன் அடித்து கொலை



  • வீடு புகுந்து இளம்பெண் படுகொலையில் கணவர் உட்பட 10 பேரிடம் விசாரணை



  • கள்ளக்காதலை விட மறுத்த தந்தை அடித்து கொலை மகன்களுக்கு வலைவீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]