இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

9/18/2017 3:57:38 PM
குடகில் தங்கவைக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் ஓரிரு நாளில் தமிழகம் வருகின்றனர்? நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை நீடிப்பு எதிரொலி : கவர்னர் தனி விமானத்தில் நாக்பூர் செல்கிறார்

நியூயார்க் : ஐநா கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் சுஷ்மா அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். நியூயார்க்கில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார். இந்நிலையில் தற்போது 72வது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் விமான நிலையம் வந்தடைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை முன்னிட்டு சுஷ்மா சுவராஜ் அமெரிக்காவில் 7 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
 ஐ.நா.வில் உறுப்பினராக உள்ள நாடுகளில் 120 நாடுகள் வரை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐநாவின் இந்திய பிரதிநிதி சையது அக்பரூதீன் கூறுகையில், இந்த மாநாட்டில் ஐ.நா. அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் இந்த பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ்  சந்தித்து பேசுகிறார். இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டம் ஒன்றிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். ஐநா மற்றும் சர்வதேச நாடுகளின் கூட்டத்தில் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடுகளை சுஷ்மா எடுத்துரைக்க உள்ளார்.

மேலும் சில
  • பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிகோவுக்கு கூகுள் உதவி



  • அமெரிக்காவில் இந்திய டாக்டர் கொலையில் வாலிபர் கைது



  • ஐநா தடைக்கு பிறகும் ஜப்பான் மீது சீறி பாய்ந்த வடகொரிய ஏவுகணை: பொது மக்கள் அதிர்ச்சி



  • மலேசியா பள்ளியில் தீ 25 பேர் பரிதாப பலி



  • லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜர்



  • அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர் பலி, மாணவி உள்பட 3 பேர் படுகாயம்



  • 30 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு அமெரிக்காவை புரட்டி எடுத்த இர்மா புயல்: வீடுகள், சாலைகள் சேதம், புயலுக்கு 24 பேர் பலி



  • எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை



  • மியான்மர் அதிபர் ஹதின் கியாவுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு



  • அந்தமானில் இன்று நிலநடுக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]