இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

9/18/2017 3:53:21 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

சென்னை : சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார்.
முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் கடந்த  2005ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர்  காரை ரூ. 55 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த கார் 2004ம்  ஆண்டு தயாரிக்கப்பட்டது என சென்னை துறைமுகத்தில் கணக்கு காட்டி இறக்குமதி  செய்யப்பட்டுள்ளதையும் மேலும் அதில்  வரி ஏய்ப்பு செய்திருப்பதையும் சுங்க இலாகா துறையினர் கண்டு  பிடித்தனர். இதுதொடர்பாக காரை  விற்பனை செய்த மும்பையைச்  சேர்ந்த ஹரன் மற்றும் வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று  வருகிறது. மேலும் ஏற்கனவே இந்த காருக்கான 20.31 லட்ச ரூபாய் வரியை சுஷ்மிதா  சென் செலுத்தியுள்ளார். மேலும் சுங்க இலாகா துறையினர் சாட்சியாக ஏற்கனவே  எழும்பூர் நீதிமன்றத்தில் சுஷ்மிதா சென் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது வரி செலுத்தியதற்கான ஆவனங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம்  குறுக்கு விசாரணை நடத்த   நேரில் ஆஜராக பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுஷ்மிதா சென் நேரில் ஆஜராகவில்லை. அதனால்  கடந்த விசாரனையின் போது சுஷ்மிதா சென்னுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சொகுசு காருக்கான வரிசெலுத்தி விட்டதால், நேரில்  ஆஜராக பிறப்பித்த வாரண்ட்டுக்கு தடை விதிக்க  வேண்டும் எனவும், இந்த வழக்கில்  இருந்து தன்னை நீக்க வேண்டும் எனவும் நடிகை சுஷ்மிதா சென் சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்  நீதிமன்றம் சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கில் ஆஜராக நடிகை சுஷ்மிதா இன்று காலை 10.15 மணிக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அவர்கள், கூட்டத்துக்குள் சிக்கிய நடிகை சுஷ்மிதாதாவை நீதிமன்றத்துக்குள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நீதிபதி 10.30 மணி அளவில் நீதிமன்றத்துக்குள் வந்தார். அதுவரை நடிகை சுஷ்மிதா சென் அங்கேயே காத்திருந்தார். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் சில
  • அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய்



  • செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ரெய்டு எதிரொலி டிடிவி தினகரன் ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பீதி: வருமானவரித்துறையும் ஆவணங்களை சேகரிப்பதாக தகவல்



  • அரசு தரப்பில் அழைப்பு இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்: இன்று மாலை முடிவு



  • டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த தென்காசி தொகுதி அதிமுக எம்பி முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவினார்



  • பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசு பரிசீலனை.



  • உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது



  • மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு : அப்ரூவராக மாறும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு சிபிஐ குறி



  • சாதி, மதவாதிகள் இங்கு காலூன்றினால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை



  • மாநில முதல்வர்கள் பொம்மையாக இருக்க மத்திய அரசு விரும்புகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு



  • ஒரு கோடி ரூபாய்க்கு சொத்து குவித்ததாக வருமான வரித்துறைகமிஷனர் மீது சிபிஐ வழக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]