இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விஜய் மல்லையாவின் ₹100 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு மாற்றம்

9/18/2017 3:46:38 PM
பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: வங்கி மீது குண்டுவீச்சு: 4 பேர் படுகாயம்

மும்பை : சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன தலைவர் விஜய் மல்லையாவின் ரூ. 100  கோடி பங்குகள் மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா நடத்தி வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலானது. இதற்காக அவர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ. 6 ஆயிரம் கோடி கடனை நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் வெளிநாடுகளில் சொத்து வாங்க பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. வங்கிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து அவர் லண்டன் தப்பினார். அவரை கைது செய்து ஆஜர் படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு மறுத்து விட்டது. இதை தொடர்ந்து அந்நாட்டின் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக லண்டன் கோர்ட்டில் அண்மையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் இந்தியாவில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அடமானம் வைக்கப்படாத சில சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியது. இதில் யுனைடெட் ப்ருவரிஸ் நிறுவனத்தில் விஜய்மல்லையாவுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான பங்குகளும் அடங்கும். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் படி விசாரணைக்கு ஒருவர் தொடர்ந்து ஆஜராக மறுத்தால் முடக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதன் படி விஜய்மல்லையாவின் ரூ. 100 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் சில
  • ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: வங்கி மீது குண்டுவீச்சு: 4 பேர் படுகாயம்



  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு



  • குஜராத், கர்நாடகா தேர்தல் வியூகம் பற்றி ஆலோசனை: பாஜ தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது; ஜிஎஸ்டி குறித்து பிரதமர் மோடி நாளை விளக்கம்



  • ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு



  • கொசுக்களை ஒழிக்க நாங்கள் கடவுள் கிடையாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாடல்



  • உ.பி.யில் சொந்த தொகுதியான வாரணாசியில் மோடி 2 நாள் சுற்று பயணம் : 17 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : இன்று மாலை அங்குரார்ப்பணம்



  • கரூரில் செந்தில் பாலாஜி உறவினர்களின் வீடு, நிறுவனங்களில் 2ம் நாளாக ரெய்டு : மருத்துவ கல்லூரி விவகாரம் காரணமா? பரபரப்பு தகவல்கள்



  • கா்நாடகாவில் 150 இடங்களில் பாஜ வெற்றி பெறும் : பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை



  • எனது உரையாடல் உள்பட எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு : கர்நாடக முதல்வர் பகீர் குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]