இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

விமான படை மார்ஷல் அர்ஜன் சிங் உடலுக்கு இன்று இறுதி சடங்கு

9/18/2017 3:45:11 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

புதுடெல்லி : இந்திய விமான படை முன்னாள் தளபதி மார்ஷல் அர்ஜன் சிங் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
இந்திய விமான படையின் முன்னாள் தளபதியும், ஏர் மார்ஷலுமான அர்ஜன் சிங் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 98. அவரது இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றன. இதை யொட்டி டெல்லியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதுகுறித்து உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள பிரார் சதுக்கத்தில் அர்ஜன் சிங் உடலுக்கான இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து குண்டுகள் முழங்க அர்ஜன் சிங் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. கடந்த 1965ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின் போது இந்திய விமான படைக்கு தலைமை தாங்கியவர் அர்ஜன் சிங். அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.

60க்கும் அதிகமான போர் விமானங்களில் பணியாற்றியவர் என்ற பெருமை அர்ஜன் சிங்குக்கு உள்ளது. நமது நாட்டு விமான படையை உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு இணையாக வலிமை மிக்கதாக மாற்றியதில் அர்ஜன் சிங்கின் பணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் கடந்த,1965ல், அர்ஜன் சிங்கிற்கு, பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையில், ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள, விமானப்படை அதிகாரியாக கவுரவிக்கப்பட்ட பெருமை, அர்ஜன் சிங்கிற்கு மட்டுமே உண்டு. மறைந்த இந்திய விமானப் படை முன்னாள் தளபதி, மார்ஷல் அர்ஜன் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் சில
  • ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு



  • கொசுக்களை ஒழிக்க நாங்கள் கடவுள் கிடையாது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாடல்



  • உ.பி.யில் சொந்த தொகுதியான வாரணாசியில் மோடி 2 நாள் சுற்று பயணம் : 17 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : இன்று மாலை அங்குரார்ப்பணம்



  • கரூரில் செந்தில் பாலாஜி உறவினர்களின் வீடு, நிறுவனங்களில் 2ம் நாளாக ரெய்டு : மருத்துவ கல்லூரி விவகாரம் காரணமா? பரபரப்பு தகவல்கள்



  • கா்நாடகாவில் 150 இடங்களில் பாஜ வெற்றி பெறும் : பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை



  • எனது உரையாடல் உள்பட எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு : கர்நாடக முதல்வர் பகீர் குற்றச்சாட்டு



  • காங்கிரஸ் கட்சி தலைவராக நவம்பரில் ராகுல் பொறுப்பேற்பு



  • திரிபுராவில் ஆர்ப்பாட்டத்தின்போது டிவி நிருபர் அடித்து கொலை



  • மதங்கள் அடிப்படையில் சமூகத்தை பிளக்க வேண்டாம் : மே.வங்க அரசுக்கு ஐகோர்ட் குட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]