இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?

9/17/2017 2:44:46 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகிறார். அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு சட்டசபை கூடும் தேதியை அறிவித்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கவர்னருக்கு தனி,தனியாக கடிதம் அளித்தனர்.  இதனால் எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114 ஆக குறைந்தது. இதனால் எடப்பாடி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கவர்னரை சந்தித்து எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தனர். ஆனால் கவர்னர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். இதனால் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி அரசு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தினர்.

அதன்பிறகும், சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு கவர்னர் உத்தரவிடாததால் திமுக சார்பிலும், தினகரன் தரப்பிலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே முதல்வர் அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற டிடிவி.தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதில் ஜக்கையன் சபாநாயகரிடம் அளித்த விளக்கம் ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சபாநாயகர் நோட்டீஸிற்கு உரிய விளக்கம் அளிக்காத 18 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வழக்கு நிலுவையில் இருப்பதால் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை 20ம் தேதி வரை சபாநாயகர் தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார். அவர் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சட்டசபை கூடும் தேதியை அறிவித்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்ட
சபையில் பலப்பரீட்சையை சந்திக்க, திமுக கூட்டணி கட்சிகளும், தினகரன் அணியினரும் தயாராகி வருகின்றனர். இதனால், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • நெல்லை அருகே அதிகாலை கோர விபத்து பஸ் மீது லாரி மோதல் 5 பேர் பரிதாப சாவு: சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]