இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பீட்டர் அல்போன்ஸ் எழுச்சியுரை: மோடியின் புதிய இந்தியா தமிழகத்துக்கு வேண்டாம்: இரா.மனோகர் அறிக்கை

9/15/2017 5:25:58 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

சென்னை: இரா.மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெல்லத் தமிழினிச் சாகும்- அந்த மேற்கு மொழிகள் புவியிசையோங்கும்’ என்று பேசிய நீலகண்ட சாஸ்திரிகளை பேதை என்று கடிந்துரைத்த பாரதி, இந்த புவி மீது தமிழ் என்றும் நிலைத்திருக்கும் என்றான். ஆனால் இன்றோ இதற்கு நேர்மாறாக தமிழுக்கும் சோதனை தமிழனுக்கும் வேதனை, தமிழ் சிம்மாசனத்தில் சமஸ்கிருதமும், ஹிந்தியும் ஏறி அமர பார்க்கின்றன. மாநில ஆட்சியாளர்களோ மறைமுகமாகக் கூட இதை எதிர்க்க வழியின்றி, வகையின்றி, வார்த்தையின்றி, வருமான வரி சோதனை ஆயுதத்தை கண்டு அடங்கி போய் கிடக்கிறார்கள். தமிழகன் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்தான்.

முப்போகம் விளைவிக்கும் தஞ்சை மண்ணில் ஒரு போகம் விளைவிக்கவும் வழியின்றி எம் தமிழ் விவசாயி தலைநகரில் நிர்வாணக் கோலத்தில் நிற்கின்றான். எதை உண்ண வேண்டும், எதை கற்க வேண்டும் என்று தமிழனுக்கு தலைநகரில் இருந்து உத்தரவு வருகிறது. கைநாட்டு வைத்தவன் பிள்ளை, மருத்துவம் கற்க வேண்டும் என்று நீட்டாகச் சொன்ன பெருந்தலைவர் காமராஜரை புறக்கணித்துவிட்டு, நீட் தேர்வை நிர்பந்திக்கிறது நெடுவாசலில் நமக்கு குழிதோண்டிய மேதாவிகள் கூட்டம். அமிழ்தினும் இனிய தமிழ் பேசும் தமிழர் உரிமைக்காக இன்னும் எத்தனை அனிதாக்களை தூக்கிலிடப்போகிறோம்.

 தமிழனே, கடந்த கால போராட்டங்களை நினைவு கூறாதவருக்கு நிகழ்காலம் இல்லை. நிகழ்காலத்தில் போராடாதவருக்கு எதிர்காலம் இல்லை என்பதை மனதில் வை. இதனை உணர்த்தும் விதமாக வரும் 22ம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மண அளவில் சென்னை, எண்.54, ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தில், ‘மோடியின் புதிய இந்தியா தமிழகத்திற்கு வேண்டாம்’ என்ற தலைப்பில் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், மக்கள் விரோத கொள்கையில் ஈடுபடும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எழுச்சியுரையாற்றுகின்றார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]