இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இரு தரப்பு தொடர் விவகாரம்: பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது

9/15/2017 3:44:19 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

லாகூர்: 2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன், முழுமையான இரு தரப்பு தொடரில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதும் இரு தரப்பு தொடர்களில் விளையாடுவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இடையே, 2014ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன்பின் காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நடத்தும் போட்டிகளில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

முன்னதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ மதிக்கவில்லை எனக்கூறி, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிசிபி வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு வந்திருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், ‘’இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு தொடரில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகிறோம். ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடும்படி, எங்களால் இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது. இரு தரப்பு கிரிக்கெட் தொடர் என்பது, இரு நாட்டு வாரியங்களுக்கு இடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவான இடங்களில் விளையாடலாம், இழப்பீடு வழங்க வேண்டும் என பிசிபி கூறி வருவதை பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் நாங்கள் நடுநிலையுடன்தான் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார்.

2015-2023ம் ஆண்டு வரை, 6 இரு தரப்பு தொடர்களில் விளையாடுவது என, பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 2014ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது. இதன்படி மொத்தம் 14 டெஸ்ட், 30 ஒரு நாள், 12 டி20 போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாட இருந்தன. இதில், 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும் சில
  • உலக லெவன்-பாக். இடையே இன்று கடைசி டி.20 போட்டி



  • இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சந்தேகம்



  • டோனி ஸ்டைலில் முடித்தார்! போட்டியை நிறைவு செய்வது பழக்கமாகி விட்டது: உலக லெவன் வீரர் திசாரா பெரேரா பேட்டி



  • காமன்வெல்த் வலு தூக்கும் போட்டி சேலம் மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை: இனிப்பு வழங்கி தாய் கொண்டாட்டம்



  • ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன: முகமது ஷமி உற்சாகம்



  • உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு



  • ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு தொடர் ஓய்வு ஏன்?: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்



  • பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி தலைவர் கருத்து



  • மூன்று வகையான போட்டிகளுக்கும் தென் ஆப்ரிக்க கேப்டனாக டூ பிளெஸ்ஸிஸ் நியமனம்



  • உலக லெவன் தொடர் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை வீரர்களிடம் கூறினேன்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]