இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

டோனி ஸ்டைலில் முடித்தார்! போட்டியை நிறைவு செய்வது பழக்கமாகி விட்டது: உலக லெவன் வீரர் திசாரா பெரேரா பேட்டி

9/14/2017 4:00:43 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

லாகூர்: பாகிஸ்தான்-உலக லெவன் இடையேயான, 2வது டி20 போட்டி, லாகூர் கடாபி மைதானத்தில், நேற்று இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 45, அகமது செஷாத் 43 ரன்கள் எடுத்தனர். திசாரா பெரேரா, சாமுவேல் பத்ரி தலா 2, பென் கட்டிங், இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த உலக லெவன், 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹசீம் அம்லா 72, திசாரா பெரேரா 47 ரன்கள் எடுத்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இமாத் வாசிம், சோகைல் கான், முகமது நவாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். உலக லெவன் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ருமான் ரேஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் கிடைத்தன. இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. எனினும் இந்திய வீரர் டோனியின் ஸ்டைலில், 5வது பந்தில் திசாரா பெரேரா சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார். திசாரா பெரேராவுக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அவர் கூறுகையில், ‘’உலக லெவன் அணிக்கு தேர்வானது எனக்கு கிடைத்த கவுரவம். இது எனது கனவு. கடைசி வரை நிலைத்து நின்று விளையாடும்படி ஹசீம் அம்லா என்னிடம் கூறினார். வழக்கமாக இதே போன்ற சூழ்நிலைகளில் எனது நாட்டு அணிக்காக (இலங்கை) விளையாடுவேன்.

போட்டியை நிறைவு செய்வது தற்போது எனக்கு பழக்கமாகி விட்டது. எங்களை நன்கு உற்சாகப்படுத்தும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி’’ என்றார். முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், தொடரை 1-1 என உலக லெவன் சமன் செய்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி, லாகூர் கடாபி மைதானத்தில், இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

 2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது லாகூரில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முன்னணி அணிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன.  உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும், பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், ஐசிசி ஒத்துழைப்புடன் உலக லெவன் அணி உருவாக்கப்பட்டு, சுதந்திர கோப்பை என்ற பெயரில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சில
  • இரு தரப்பு தொடர் விவகாரம்: பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது



  • உலக லெவன்-பாக். இடையே இன்று கடைசி டி.20 போட்டி



  • இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சந்தேகம்



  • காமன்வெல்த் வலு தூக்கும் போட்டி சேலம் மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை: இனிப்பு வழங்கி தாய் கொண்டாட்டம்



  • ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன: முகமது ஷமி உற்சாகம்



  • உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு



  • ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு தொடர் ஓய்வு ஏன்?: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்



  • பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி தலைவர் கருத்து



  • மூன்று வகையான போட்டிகளுக்கும் தென் ஆப்ரிக்க கேப்டனாக டூ பிளெஸ்ஸிஸ் நியமனம்



  • உலக லெவன் தொடர் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை வீரர்களிடம் கூறினேன்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]