இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

காமன்வெல்த் வலு தூக்கும் போட்டி சேலம் மாணவி நிவேதா தங்கம் வென்று சாதனை: இனிப்பு வழங்கி தாய் கொண்டாட்டம்

9/14/2017 3:59:52 PM
அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய் ரயில் பயண முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு: 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே செல்லும் என அறிவிப்பு

சேலம்: சேலம் அழகாபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி சித்ரா. இவர்களது மூத்த மகள் நிவேதா. விநாயகா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மூன்றாம் வகுப்பில் இருந்து, மாணவி நிவேதா  வலு தூக்கும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தந்தை வெங்கடேஸ்வரனும் வலு தூக்கும் வீரர் என்பதால், சிறு வயது முதலே நிவேதாவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள நிவேதாவுக்கு, தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா தனது தந்தை வெங்கடேஸ்வரனுடன் தென் ஆப்ரிக்கா சென்றார். நேற்று முன் தினம் நடைபெற்ற 43 கிலோ எடை பிரிவு போட்டியில் நிவேதா கலந்து கொண்டார். இதில், நிவேதா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதனால் அவரது தாய் சித்ரா மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மகளின் சாதனையை கொண்டாடும் வகையில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தாய் சித்ரா இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘வலு தூக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிவேதா, மூன்றாம் வகுப்பில் இருந்தே கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேசிய, மாநில, மாவட்ட அளவில் நடந்த வலு தூக்கும் போட்டியில் பல பரிசுகளை பெற்றுள்ளார். தற்போது காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில் எனது மகள், தங்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் நிவேதா பெருமை சேர்த்துள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,’’ என்றார். 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட போட்டியில், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நிவேதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் சில
  • இரு தரப்பு தொடர் விவகாரம்: பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது



  • உலக லெவன்-பாக். இடையே இன்று கடைசி டி.20 போட்டி



  • இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பின்ச் சந்தேகம்



  • டோனி ஸ்டைலில் முடித்தார்! போட்டியை நிறைவு செய்வது பழக்கமாகி விட்டது: உலக லெவன் வீரர் திசாரா பெரேரா பேட்டி



  • ஆஸ்திரேலியாவை வீழ்த்த சிறப்பு திட்டங்கள் உள்ளன: முகமது ஷமி உற்சாகம்



  • உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு



  • ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு தொடர் ஓய்வு ஏன்?: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்



  • பாகிஸ்தானில் சர்வதேச போட்டி நடப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கு நல்லது: ஐசிசி தலைவர் கருத்து



  • மூன்று வகையான போட்டிகளுக்கும் தென் ஆப்ரிக்க கேப்டனாக டூ பிளெஸ்ஸிஸ் நியமனம்



  • உலக லெவன் தொடர் இன்று தொடக்கம்: பாகிஸ்தான் பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை வீரர்களிடம் கூறினேன்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]