சிறுமிபலாத்காரம் பிளஸ் 2 மாணவர் உள்பட 3 பேர் கைது
9/14/2017 3:50:05 PM
சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள பாப்பம்பாடியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, கடந்த 4ம் தேதி அருகிலுள்ள வைரமுனிஸ்வரன் கோயிலுக்கு சென்று விட்டு மாலையில் தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற 4 பேர், ஆசைவார்த்தை கூறி கோனேரிவலவு ஏரிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் அங்கு வருவதை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் தந்தை தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோனேரிவலவை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சிவக்குமார் (20), தாமரைச்செல்வன்(20), தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.