இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டீசல் பெட்ரோலுக்குப் பதில் எத்தனால் தயாரிக்க முடிவு : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

9/8/2025 3:40:03 PM
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: பல ஆயிரம் பேர் கைது அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் ரத்து

புதுடெல்லி : பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதில் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க முன் வர வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை செய்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: “இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசலில் இயக்கப்படும் வாகனங்களால்தான்  அதிகளவில் மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் மாற்று எரிபொருள் சக்தியை பயன்படுத்த வேண்டும். நாம அனைவரும் உடனடியாக மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும். பேட்டரிகள், மின்சக்திகள், இயங்கக்கூடிய கார்களையும், பேருந்துகளையும் பயன்படுத்த, இனி  இது போன்ற வடிவமைபிலுள்ள வாகனங்களை தயாரிக்க தனியார் வாகன தயாரிப்பாளர்கள் முன் வரவேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத  வாகனங்களை தயாரிக்க வேண்டும். இந்த புதிய திட்டத்திற்கு அரசுக்கு ஒத்துழைப்பு தந்து  வாகன தயாரிப்பாளர்கள் மாறாவிட்டால், அவர்கள் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.

இது குறித்து  மின் வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என அரசு சார்பில் இதற்கு முன்பே வாகன தயாரிப்பாளர்களை அழைத்து பேசியபோது பேட்டரி விலை மிகவும் அதிகம் என வாகன தயாரிப்பாளர்கள் கூறினர். இப்போது, பேட்டரியின் விலை 40 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது. மின் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்தால்  பேட்டரி விலை மேலும் குறையும். மின் வாகனங்கள் தொடர்பான கொள்கையை, அரசு விரைவில் வெளியிட உள்ளது. நாட்டின் பல இடங்களில், மின்வாகனங்களுக்கு, ‘ரீசார்ஜ்’ நிலையங்கள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், இந்தியாவில், அதிக அளவிலான மின் வாகனங்களை இயக்கப்பட திட்டம் ஒன்றும் உள்ளது. இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிகளவில் மின் வாகனங்கள் இயக்கப்படும் என்பது உறுதியாக சொல்லுகிறேன்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு  நாம் அதிக அளவிலான பணத்தை  செலவிடுகிறோம். இதை, குறைக்க வேண்டும். இதற்கும் மாற்று எரிபொருளாக பருத்தி, நெல், கோதுமை, மூங்கில் கழிவுகளிலிருந்து எத்தனால் தயாரிக்கலாம். எத்தனாலை பயன்படுத்தி, வாகனங்களை இயக்கினால் மாசு ஏற்படாது. எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளை துவக்கவும், அரசு முடிவு செய்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழலை பேணிக்காக்க மாற்று எரிபொருள் திட்டத்தை பயன்படுத்துவதைப் போல நாமும் விரைவில் மாற்று எரிபொருளுக்கு மாறுவோம்’’ எனப்பேசினார்.

மேலும் சில
  • விரிவாக்கத்திற்கு பிறகு முதன்முறையாக மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: டெல்லியில் இன்று மாலை நடக்கிறது



  • டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் மனித மாமிசம் சாப்பிடும் போராட்டம்



  • அரியானா பள்ளி மாணவன் கொலை மத்திய, மாநில அரசுகளுக்கு 3 வார கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி



  • உ.பி மேல்சபை இடைத்தேர்தலில் பாஜ அனைத்து இடங்களிலும் வெற்றி



  • புளூவேல் விளையாட்டு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு: 15ம் தேதி விசாரணை



  • லாலு குடும்பத்துக்கு சொந்தமான 165 கோடி சொத்துக்கள் பறிமுதல்: வருமானவரித்துறை அதிரடி



  • புதுவை நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் டெல்லியில் முகாம் புதுவை நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் டெல்லியில் முகாம்



  • போலி சாமியார் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது: திக் விஜய் சிங் கிண்டல்



  • செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீடித்தால் குழப்பம் வரும்



  • பெண் பத்திரிக்கையாளர் கொலை, ரோஹிங்கியா விவகாரம்: இந்திய அரசுக்கு ஐநா மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]