துளிகள்
9/5/2025 4:16:57 PM
* புரோ கபடி லீக் 5வது சீசன் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், பாட்னா பைரேட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில், பெங்கால் வாரியர்ஸ்-ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
* இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5வது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, தொடக்க வீரர் ஷிகார் தவானின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஷிகார் தவான் இந்தியா திரும்பினார். தற்போது தனது தாயாருக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்பு இருந்ததை விட அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் ஷிகார் தவான் தெரிவித்துள்ளார்.