இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் தினகரன் மனைவி மற்றும் உறவினர்கள் சந்திப்பு: முக்கிய ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர்

9/5/2025 4:15:05 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுடன் டிடிவி.தினகரனின் மனைவி மற்றும் உறவினர்கள் சந்தித்து பேசினர். அப்போது முக்கிய ஆவணங்களில்  கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக பெண் போலீஸ் அதிகாரியால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சசிகலாவை சிறையில் அடிக்கடி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம்சாட்டினர். இதனால் அவருக்கு சிறையில்  வழங்கப்பட்ட சலுகைகள் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 15 நாட்களுக்கு ஒருமுறை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை அவரது உறவினர்கள்  சந்தித்து பேசி வருகின்றனர்.
 அதன் அடிப்படையில் நேற்று சசிகலாவின் உறவினர்களான டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா மற்றும் மைத்துனர் வெங்கடேஷ், ராஜராஜன், இளவரசியின்  மகன்  விவேக், மகள் சைலஜா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், கர்நாடக மாநில அதிமுக (அம்மா) அணி செயலாளர் புகழேந்தி உட்பட 12 பேர் சந்தித்து பேசினார். சுமார் 40  நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது, குடும்ப விஷயங்கள் பற்றி பேசியதாக தெரிகிறது.மேலும், முக்கிய ஆவணங்கள் சிலவற்றில் டிடிவி.தினகரன் மனைவி அனுராதா, சசிகலாவிடம் கையெழுத்துகளை வாங்கி சென்றதாக தெரிகிறது.

மேலும் சில
  • இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு 18% ஜிஎஸ்டி எதிர்த்து 22 லட்சம் பேர் கையெழுத்து: பிரதமருக்கு அனுப்பப்பட்டது



  • அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் ஆஜர்



  • வேளாங்கண்ணியில் நாளை தேர் பவனி



  • பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: பஸ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்



  • நள்ளிரவில் சுடுகாட்டில் செல்பி ப்ளூவேல் விளையாட்டில் சிக்கிய காரைக்கால் வாலிபரை மீட்டது போலீஸ்



  • வீட்டு சுவர் இடிந்து தம்பதி, மகள் பலி: மயிலாடுதுறை அருகே பரிதாபம்



  • நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்துக்கு சீல்



  • 144 தடை உத்தரவு ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு



  • டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூர் சிறுவன் பலி



  • நீட் தேர்வு பயிற்சிக்காக 412 மையம்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]