திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
9/5/2025 4:05:21 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் இன்று அனந்தபத்மநாப விரதத்தையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு இன்று சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பாற்கடலில் ஆதிஷேச நித்திரையில் உள்ள மகாவிஷ்ணு கண் திறந்து பார்த்த நாளில், அனந்தபத்மநாப விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பதும் ஐதீகம். அதன்படி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனந்தபத்மநாப விரதம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, அதிகாலை ஏழுமலையான் கோயிலில் சுதர்ஷன சக்கரத்தில் 4 மாட வீதியில் சக்கரத்தாழ்வார் ஊர்வலம் நடந்தது.
பின்னர் பூவராக சுவாமி கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.