இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊழல் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேலூர் காசநோய் துணை இயக்குநர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: உதவியாளர்கள் வீடுகளிலும் சோதனை

9/5/2025 3:49:23 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

வேலூர்: வேலூரில் ₹1 கோடி வரை ஊழல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காசநோய் துணை இயக்குநர் மற்றும் அவருக்கு உதவிய 2 பேரின் வீடுகளில் விஜிலென்ஸ்  போலீசார் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனராக ராஜா சிவனாந்தம் பணியாற்றி வந்தார். காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் முழுவதும்  தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம்தேதியில் இருந்து 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதிவரை 19 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கூறி அவர்களின்  ஊதியத்தொகையை, காசநோய் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ரமேஷ், தர் ஆகியோர் உதவியோடு பணத்தை கையாடல் செய்ததாகவும், மருந்து பொருட்கள்  வாங்கியதில் ₹1 கோடி வரை ஊழல் செய்ததாகவும் ராஜா சிவானந்தம் மீது புகார்கள் வந்தன.

இதையடுத்து அவர் மீது விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், களப்பணியாளர்கள் சம்பளம் கையாடல் மற்றும் மருந்து பொருட்கள்  வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 30ம்தேதி ஓய்வு பெற இருந்த ராஜா சிவானந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு விஜிலென்ஸ் ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சத்துவாச்சாரியில் உள்ள ராஜா சிவானந்தம், ரமேஷ்  ஆகியோர் வீடு மற்றும் தொரப்பாடியில் உள்ள தர் வீடு என ஒரே நேரத்தில் 3 வீடுகளில் சோதனையை தொடங்கி நடத்தி வருகின்றனர். வீட்டின் உள்ளே இருந்து  வெளியே செல்லவோ, வெளியில் இருந்து வீட்டிற்கு வரவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை. சோதனைக்கு பிறகே ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என தெரிய  வரும்.இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு 18% ஜிஎஸ்டி எதிர்த்து 22 லட்சம் பேர் கையெழுத்து: பிரதமருக்கு அனுப்பப்பட்டது



  • அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் ஆஜர்



  • வேளாங்கண்ணியில் நாளை தேர் பவனி



  • பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: பஸ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்



  • நள்ளிரவில் சுடுகாட்டில் செல்பி ப்ளூவேல் விளையாட்டில் சிக்கிய காரைக்கால் வாலிபரை மீட்டது போலீஸ்



  • வீட்டு சுவர் இடிந்து தம்பதி, மகள் பலி: மயிலாடுதுறை அருகே பரிதாபம்



  • நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்துக்கு சீல்



  • 144 தடை உத்தரவு ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு



  • டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூர் சிறுவன் பலி



  • நீட் தேர்வு பயிற்சிக்காக 412 மையம்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]