இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்ற ராம் ரகீம் ஆசிரமத்தில் நவீன ஆயுதங்கள் பறிமுதல்

9/5/2025 3:35:34 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

சிர்சா: பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சாமியார் ராம் ரகீமின் ஆசிரமத்திலிருந்து ஏராளமான நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக  போலீசார் தெரிவித்துள்ளனர்.அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற புதிய சீக்கிய மத அமைப்பு இயங்கி வருகிறது. சீக்கிய மத கொள்கைகள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மத  கொள்கைகளை கலந்து புதிய மத கொள்கைகளை இந்த அமைப்பினர் பின்பற்றி வருகின்றனர். இதன் தலைவராக ராம் ரகீம் உள்ளார். இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த 2  பெண்களை இவர் பலாத்காரம் செய்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ கோர்ட் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த வாரம்  தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரியானா மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர்.  

ராணுவம் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் வந்தது. இதை தொடர்ந்து சிர்சாவில் உள்ள தலைமை ஆசிரமம் மற்றும் அதன் கிளைகளில் கடந்த சில  நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது ஏராளமான நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  சிர்சா சதார் காவல் நிலைய தலைமை அதிகாரி தினேஷ் குமார் கூறுகையில், ராம் ரகீம் கைது செய்யப்பட்டவுடன் அவர் வசம் மற்றும் அவரது சீடர்கள் வசம் உள்ள  ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நோக்கில ்சோதனை நடத்தப்பட்டது. இதில் லைசன்ஸ் பெறப்பட்ட ஆயுதங்களுடன் லைசன்ஸ் இல்லாத நவீன  ஆயுதங்களும் சிக்கின. 9 எம்எம் பிஸ்டல்கள், சிங்கிள் மற்றும் டபுள் பேரல் துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள் போன்றவை இதில் அடங்கும் என்றார். சோதனை  தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சில
  • ஜெர்மன் நாட்டை சேர்ந்த தெலங்கானா எம்எல்ஏவின் இந்திய குடியுரிமை ரத்து: மத்திய அரசு நடவடிக்கை



  • 2018ல் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பாஜ கூட்டணி ஆட்சி: அமித்ஷா நம்பிக்கை



  • பெங்களூரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை



  • முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’: பஞ்சாபில் காலியானது அரசு கஜானா



  • திருப்பதி கோயிலில் 3.56 கோடி காணிக்கை



  • காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சம்மன்



  • உண்மையின் ஓசையை ஒடுக்கமுடியாது பெண் பத்திரிகையாளர் கொலைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்



  • கா்நாடக டிஎஸ்பி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • நிதிஷ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சரத் யாதவ் பதவி பறிக்க துணை ஜனாதிபதியிடம் மனு



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]