இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இருதரப்பு மீனவர்கள் மோதல் மறியல் செய்த 500 பேர் கைது: நாகையில் பதற்றம்: போலீஸ் குவிப்பு

9/4/2025 4:00:12 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

நாகை: நாகை துறைமுகம் அருகேயுள்ள பழைய மீன் இறங்கு தளத்தில் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை விற்று வந்தனர். கடந்த 6 மாதங்கள் முன்  அக்கரைப்பேட்டையில் புதிய மீன் இறங்கு தளம் திறக்கப்பட்டு, அங்கு விற்பனை நடந்து வருகிறது. அங்கு மீன் விற்பனை செய்ய அக்கரைப்பேட்டை மீனவர்கள் எதிர்ப்பு  தெரிவித்தனர்.இதனால் அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கும், நம்பியார் நகர் மீனவர்களுக்கும் இடையே மோதல்கள் இருந்து வந்தன. மீனவர்கள் பயன்படுத்தாமல் உள்ள துறைமுகம் அருகேயுள்ள பழைய மீன் இறங்கும் தளத்தில் மீன்களை விற்கப்போவதாக நம்பியார் நகர் மீனவர்கள் அறிவித்திருந்தனர்.  நேற்று மாலை நம்பியார் நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீன் இறங்கும் தளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அக்கரைப்பேட்டை  மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பீர் பாட்டில், பிராந்தி பாட்டில், இரும்பு குழாய், உருட்டுக்கட்டை போன்றவற்றைக்  கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். மற்றொரு தரப்பினர் கற்களை வீசினர். இதில், 27 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறனர்.

இந்நிலையில் ஊசிமாதா கோயில் துறைமுகத்தில் மீனவர்கள் வைத்திருந்த வலைகள் மற்றும்   3 பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. நம்பியார் நகர் மீனவர்கள் ஆண்களும்,  பெண்களும் மாலை 6 மணி முதல் மாவட்ட அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட நம்பியார்நகர் மக்கள் இரவு முழுவதும் சாலையோரங்களிலிலே இருந்தனர். அவர்கள் இன்று காலை நாகை புது பஸ்நிலையத்தில் அனைத்து  வழிகளை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் வெளியே வரமுடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலை மற்றும் வெளியூர்களுக்கு  செல்வோர் அவதிக்குள்ளாகினர். இதேபோல் மாவட்ட நூலகம், நகராட்சி தண்ணீர் டேங்க் பகுதியிலும் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். எஸ்பி தேஷ் முக் சேகர்  சஞ்சய் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோகும்படி கூறினார். அவர்கள் நகராததால் நிலைமை சரிசெய்ய அவர்களை கைதுசெய்ய உத்தரவிட்டார்.  இதையடுத்து 3 இடங்களிலும் மறியல் செய்த 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் சில
  • இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு 18% ஜிஎஸ்டி எதிர்த்து 22 லட்சம் பேர் கையெழுத்து: பிரதமருக்கு அனுப்பப்பட்டது



  • அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் ஆஜர்



  • வேளாங்கண்ணியில் நாளை தேர் பவனி



  • பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: பஸ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்



  • நள்ளிரவில் சுடுகாட்டில் செல்பி ப்ளூவேல் விளையாட்டில் சிக்கிய காரைக்கால் வாலிபரை மீட்டது போலீஸ்



  • வீட்டு சுவர் இடிந்து தம்பதி, மகள் பலி: மயிலாடுதுறை அருகே பரிதாபம்



  • நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்துக்கு சீல்



  • 144 தடை உத்தரவு ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு



  • டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூர் சிறுவன் பலி



  • நீட் தேர்வு பயிற்சிக்காக 412 மையம்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]