இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய அமைச்சர் சுஷ்மாவை காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு போஸ்டர்

8/25/2017 3:20:55 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

போபால்: மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியின் எம்.பி.,யான சுஷ்மா ஸ்வராஜை காணவில்லை என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மக்களவை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். தற்போது விதிஷா நகரின் பல இடங்களில், ‘சுஷ்மாவை காணவில்லை’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில்  கூறப்பட்டுள்ளதாவது: விதிஷா விவசாயிகள் இறந்து வருகின்றனர்; விதிஷாவின் விவசாயிகள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்;

விதிஷாவின் இளைய தலைமுறையினர் வேலை இல்லாமல் உள்ளனர்; விதிஷா மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; எம்.பி.,யும் காணவில்லை. விதிஷா எம்.பி.,யான சுஷ்மா ஸ்வராஜை எங்காவது பார்த்தால், அவரை தொடர்பு கொள்ள முடியாமல் விதிஷா மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுவதாக தெரிவியுங்கள். காணாமல் போன எம்.பி., பற்றி தகவல் தெரிந்தால், ஆனந்த் பிரதாப் சிங் என்பவரிடம் தெரிவியுங்கள். இவ்வாறு போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட பா.ஜ., தலைவர் தினேஷ் சோனி கூறுகையில், இது எதிர்க்கட்சியினரின் வேலை. சுஷ்மா சமீபத்தில் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் பயணம் செய்ய கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், அவர் போபால் நகருக்கு வந்து தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்து வருகிறார், என்றார்.

மேலும் சில
  • பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு



  • அரசு இணையதளங்களுக்குள் ஊடுருவி ஆதார் தகவல்களை சுருட்ட அமெரிக்க உளவுத்துறை முயற்சி: விக்கி லீக்ஸ் பகீர் குற்றச்சாட்டு



  • உ.பி.யில் வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு



  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்



  • பீகாரில் வருகிற 27ம் தேதியன்று லாலு நடத்தும் பேரணி: சோனியா, மாயாவதி புறக்கணிப்பு



  • தொடர் ரயில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு பணியில் 2 லட்சம் பேர்: ரயில்வே அமைச்சகம் திட்டம்



  • பீகாரில் மழை வெள்ளம் பலி எண்ணிக்கை 367 ஆனது: அசாம், உ.பி., மே.வங்கத்திலும் கடும் பாதிப்பு



  • முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டி: கோவா இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு



  • டெல்லியில் பன்றிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்



  • பீகாரில் உச்சக்கட்ட மோதல்: நாங்கள் தான் உண்மையான ஜேடியு: தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]