இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய திருடன் விபத்தில் சிக்கி சாவு: ஒருவன் படுகாயம்

8/24/2017 5:38:55 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

ஆவடி: லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து பைக்கில் தப்பிய திருடன் விபத்தில் சிக்கி பலியானான். ஒருவன் படுகாயம் அடைந்தான். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, கச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (31). இவர் லாரி டிரைவர். இன்று அதிகாலை 4 மணியளவில் தாம்பரம்-மாதவரம் 200 அடி பைபாஸ் சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதி அருகே வந்தபோது, லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பெருமாள் சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த 2 பேர் வண்டியை நிறுத்தி, பெருமாளிடம் ‘அவசரமாக ஒருவருக்கு போன் செய்ய வேண்டும்.

தயவு செய்து உங்கள் செல்போனை கொடுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். அவர் போனை கொடுத்ததும் பேசுவதுபோல் நடித்து செல்போனுடன் இருவரும் பைக்கில் தப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள், செய்வதறியாது திகைத்து நின்றார். இதன்பிறகு லாரியை எடுத்துக்கொண்டு பெருமாள் சென்றார். கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் நடுவே சென்டர்மீடியனில் பைக் மோதி 2 பேர் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தனர். பெருமாள் லாரியை நிறுத்தி பார்த்தபோது தன்னிடம் செல்போன் பறித்து தப்பியவர்கள் என்று தெரிந்தது. இருப்பினும் பெருமாள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில், இறந்தவர் அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம், இந்திரா நகர், காமராஜர் தெருவை சேர்ந்த மணி (20) என்பதும் படுகாயம் அடைந்தவர் கோரை தெருவை சேர்ந்த சூர்யா (20) என்பதும் தெரிந்தது. மணியின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா சிகிச்சை பெற்று வருகின்றார். பெருமாள் செல்போனை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை



  • விநாயகர் சிலைகள் வைப்பதில் தகராறு: கல்பாக்கத்தில் பயங்கர கோஷ்டி மோதல்



  • கவர்னர் இன்று மாலை சென்னை வருகிறார்: மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுவாரா?



  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலம்: சென்னையில் 3 ஆயிரம் சிலைகள்



  • டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு? சட்ட வல்லுனர்களுடன் சபாநாயகர் ஆலோசனை



  • ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி. கல்லூரி முதல்வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • ஆரணி ஆற்றில் பதுங்கியிருந்து மணல் திருட வந்த லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்



  • மதுரவாயலில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டி கொலை: கும்பலுக்கு போலீஸ் வலை



  • தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு



  • நெடுவாசலில் 135வது நாளாக போராட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]