இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மதுரவாயலில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டி கொலை: கும்பலுக்கு போலீஸ் வலை

8/24/2017 4:13:40 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

பூந்தமல்லி: மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த மதுரவாயல் கெங்கையம்மன் கோயில் தெரு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (23). ரவுடியான இவர் மீது மதுரவாயல் காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது. கடந்த 6  மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பல்சர் சதீஷ் என்பவருக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட தகராறில்  சதீஷை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த  சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுதொடர்பாக அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் சங்கரை தீர்த்துக்கட்ட நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி நேற்றிரவு மதுரவாயல் லஷ்மி நகரில் தனது நண்பர்களுடன் சங்கர் பேசிகொண்டிருந்தார். இதுபற்றி அறிந்ததும் சதீஷ், தனது நண்பர்களான கார்த்தி (எ) கோலி, சன்னு, அஜீத் ஆகியோருடன் அங்கு விரைந்து உள்ளார். இவர்களை பார்த்ததும் சங்கர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அவர்கள் சங்கரை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த சங்கர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிபடுத்திய பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சங்கரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது மதுரவாயலில் ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் அடுத்தடுத்து நடந்துள்ள கொலையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் சில
  • டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை



  • விநாயகர் சிலைகள் வைப்பதில் தகராறு: கல்பாக்கத்தில் பயங்கர கோஷ்டி மோதல்



  • கவர்னர் இன்று மாலை சென்னை வருகிறார்: மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுவாரா?



  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலம்: சென்னையில் 3 ஆயிரம் சிலைகள்



  • டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு? சட்ட வல்லுனர்களுடன் சபாநாயகர் ஆலோசனை



  • ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி. கல்லூரி முதல்வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • ஆரணி ஆற்றில் பதுங்கியிருந்து மணல் திருட வந்த லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்



  • லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய திருடன் விபத்தில் சிக்கி சாவு: ஒருவன் படுகாயம்



  • தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு



  • நெடுவாசலில் 135வது நாளாக போராட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]