இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முதல்வர் எதிர்ப்பு எம்எல்ஏ எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது: அறந்தாங்கி எம்எல்ஏ தினகரனுக்கு ஆதரவு

8/24/2017 3:47:32 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

சென்னை: அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ டி.டி.வி.தினகரனுக்கு இன்று திடீரென ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்து வந்த 19 எம்எல்ஏக்கள் திடீரென தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த 19 எம்எல்ஏக்களும் டி.டி.வி.தினகரனுக்கு தற்போது ஆதரவு கொடுத்து வருகின்றனர். டி.டி.வி.தினகரன் 19 எம்எல்ஏக்களையும் பாண்டிச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் மூன்று நாட்களாக தங்க வைத்துள்ளார். இந்த 19 எம்எல்ஏக்களை, மீண்டும் அரசுக்கு ஆதரவாக செயல்பட வைக்க அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முயற்சி செய்து வருகிறார்கள். மேலும், அவர்களின் உறவினர்களிடமும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், 19 எம்எல்ஏக்களும் முதல்வருக்கு எதிராக செயல்படுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று டி.டி.வி.தினகரன் அணிக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி, தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களது ஆதரவு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு ஆதரவான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 111ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை



  • விநாயகர் சிலைகள் வைப்பதில் தகராறு: கல்பாக்கத்தில் பயங்கர கோஷ்டி மோதல்



  • கவர்னர் இன்று மாலை சென்னை வருகிறார்: மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுவாரா?



  • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலம்: சென்னையில் 3 ஆயிரம் சிலைகள்



  • டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு? சட்ட வல்லுனர்களுடன் சபாநாயகர் ஆலோசனை



  • ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்ஜி. கல்லூரி முதல்வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • ஆரணி ஆற்றில் பதுங்கியிருந்து மணல் திருட வந்த லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்



  • லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பிய திருடன் விபத்தில் சிக்கி சாவு: ஒருவன் படுகாயம்



  • மதுரவாயலில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டி கொலை: கும்பலுக்கு போலீஸ் வலை



  • தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]