இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தால் மட்டும் எங்களால் வெற்றிபெற முடியாது

8/24/2017 2:58:41 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

டாக்கா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய துணை கண்ட மைதானங்களில் ஆஸ்திரேலியா தடுமாறும். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணியின் சமீபத்திய சிறப்பான செயல்பாடுகளும் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமீம் இக்பால் கூறுகையில், ‘’சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளங்கள் உதவி செய்தால், அவர்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை உருவாக்குவதன் மூலம் மட்டும் நாங்கள் வெற்றி பெற்று விட முடியாது. நாதன் லயன் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியிலும் உள்ளனர். எனவே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவி செய்தால், 2 அணிகளும் ரன்களை குவிக்க தடுமாறும் என்பதே உண்மை. எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இது போன்ற ஆடுகளங்களில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீச வேண்டிய தேவை உள்ளது.

வெற்றியை பார்க்க வேண்டும் என விரும்பினால், இந்த அத்தனை விஷயங்களும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். போட்டி நடக்கும் 5 நாட்களும் சீசனுக்கு சீசன் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடாவிட்டாலும் எங்களால் வெற்றி பெற முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட போகிறோம் என்பதால், நம்பிக்கையை இழந்து விட மாட்டோம். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது சாத்தியமற்றது என நான் நினைக்கவில்லை. அனைத்து துறைகளில் நன்றாக பயிற்சி பெற்று தயாராகியுள்ளோம். எங்களது திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரமிது’’ என்றார்.

மேலும் சில
  • ஆர்தரின் நடத்தையை சகிக்க முடியவில்லை: பிசிபி நோட்டீசுக்கு உமர் அக்மல் பதில்



  • புரோ கபடி லீக்; போராடி டை செய்த தமிழ் தலைவாஸ்



  • தொடர் போட்டிகள் டோனிக்கு உத்வேகம் அளிக்கும்: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் 42 பந்துகளில் சதம்; அப்ரிடி மிரட்டல்



  • துளிகள்



  • பல்லேகலெவில் நாளை 2வது ஒன்டே: பரிதாப இலங்கை... பந்தாட: காத்திருக்கும் கோஹ்லி & கோ



  • இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் ஆக்ரோஷம், நம்பிக்கை இல்லை



  • வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சுனில்ஜோஷி நியமனம்



  • துளிகள்



  • கவுன்டி போட்டியில் ஆடுவது டெஸ்ட்டில் ரன் குவிக்க உதவுகிறது: புஜாரா பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]