துளிகள்
8/23/2017 4:57:54 PM
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வரும் 27ம் தேதி டாக்காவில் தொடங்குகிறது. இந்த தொடரில் வங்கதேச பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இம்ருல் கேயஸ் 3வது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. இது குறித்து பேசிய இம்ருல் கேயஸ், ‘’தொடக்க வீரராக களமிறங்குவதை விட 3வது வீரராக களம் காண்பது கடினமானது’’ என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு புத்துயிர் ஊட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உலக லெவன் அணி பாகிஸ்தானுக்கு சென்று 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பாகிஸ்தான் லெவனுக்கு எதிரான இந்த தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்காவின் ஹசீம் அம்லா அல்லது டூ பிளெஸ்ஸி ஆகிய இருவரில் ஒருவர் உலக லெவன் அணியை வழிநடத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரோ கபடி லீக் 5வது சீசனில், இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில், உத்தரபிரதேசம்-தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த 2 போட்டிகளும் லக்னோவில் அரங்கேறுகிறது.