கும்மிடிப்பூண்டி ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் நியமனம்
8/23/2017 3:32:44 PM
கும்மிடிப்பூண்டி: தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றிய, நகர, பேரூர் வாரியாக கடந்த ஜூன் மாதம் தேமுதிகவின் உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கும்மிடிப்பூண்டி பேருர் கழக செயலாளர் ஏ.ஜெயவேல், அவைத்தலைவர் ஆர்.டி.பிரபு, பொருளாளர் கே.ராம்குமார், துணை செயலாளர்கள் எம்.பூங்காவனம், எம்.மணிகண்டன், கே.வெங்கடேசன், ஜெ.செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் கே.ஆறுமுகம், எம்.ரமேஷ், சி.மோகன், கே.நந்தகுமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தேமுதிக தலைமை கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.