இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

2வது மனைவியுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை: கீரப்பாக்கத்தில் பயங்கரம்

8/23/2017 3:17:12 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே 2வது மனைவியுடன் தங்கியிருந்த பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் அடுத்த கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (24). பிரபல ரவுடியான இவர், முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆட்டோ டிரைவரின் மனைவியை 2வது திருமணம் செய்து, கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வந்தார். வீரமணி மீது கண்ணகி நகர், சேலையூர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். ஒரு மாதமாக கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம், அங்காளம்மன் கோயில் 5வது தெருவில் 2வது மனைவியுடன் ஒரு குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு ஒரு பைக்கில் 3 பேர் வீரமணி வீட்டுக்கு வந்தனர். வீட்டின் கதவை தட்டி கஞ்சா கேட்டுள்ளனர். இதனால் வீரமணி அருகே காலி இடத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை எடுக்க சென்றார். அவருடன் சென்ற கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரமணியை சரமாரியாக வெட்டினர். காயம் அடைந்த வீரமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் கும்பல் அவரை விரட்டியது. இதில் அங்குள்ள இரும்பு முள்வேலி கம்பியில் சிக்கி தடுமாறி வீரமணி விழுந்தார். அப்போது விரட்டிச்சென்ற கும்பல், வீரமணியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து வீரமணி உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து அக்கும்பல் பைக்கில் தப்பி சென்றது.

இதைப் பார்த்ததும் வீரமணி மனைவி கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்  ஓடிவந்தனர். மக்கள் கூடியதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி அறிந்ததும் காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வீரமணியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின்படி காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை கும்பலை தேடி வருகின்றனர். இக்கொலை வழிப்பறி, கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நடந்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கீரப்பாக்கத்தில் உள்ள 1ம் நம்பர் கல்குவாரியிலிருந்து 6ம் நம்பர் கல்குவாரி வரையுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை, தொழில் போட்டி காரணமாக பல்வேறு வாகனங்களில் ஏராளமான மர்ம ஆசாமிகள் வருகின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் பார் தகராறு, கஞ்சா தொழில் போட்டி, போதை தகராறு காரணமாக இதுவரை 5-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையை போலீசார் கண்டுகொள்வதில்லை’ என்றனர்.

மேலும் சில
  • டைரியில் தேதி குறித்து திருடிய ஆசாமி கைது



  • கோவை பேராசிரியை கொலை: நகை தர மறுத்ததால் மனைவியை கழுத்து நெரித்து கொன்றேன் கணவர் பரபரப்பு வாக்குமூலம்



  • குடியாத்தம் அருகே டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களை மிரட்டி மதுபானம் வாங்கிய போலீஸ் ஏட்டு உட்பட 7 பேர் கைது



  • திருப்போரூர் அருகே தையூரில் போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலத்தை அபகரித்து பிளாட் போட்டு விற்பனை: ஒருவர் கைது



  • கொன்றுவிடுவதாக மிரட்டியதால் கணவர் தற்கொலை: மனைவி, கள்ளக்காதலன் கைது



  • அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் வீட்டில் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை நடத்திய டெல்லி திருடன் சிக்கினான்



  • 610 கிலோ கஞ்சா பறிமுதல் 6 பேர் அதிரடி கைது



  • 2 பேர் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் சிறை



  • மனைவி அடித்து கொலை: சந்தேக கணவன் கைது



  • ஆட்டோவில் கடத்தப்பட்ட 15 கிலோ மாவா பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]