திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு விழா
8/16/2017 4:19:19 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளியில், மாணவ தலைவர்களுக்கு அடையாள சின்னம் அணிவிக்கும் விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் கே.எல்.பாலாஜி, கல்வி ஆலோசகர் வி.டி.தனபாலன், நிர்வாக குழு உறுப்பினர் துளசிதாஸ் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜோ.மேரி வரவேற்றார்.
இதில், பள்ளி தாளாளர் மோ.தி.உமாசங்கர் பங்கேற்று, பள்ளி தலைமை மாணவர், துணைத்தலைமை மாணவர், விளையாட்டு துறை தலைவர், கலைநிகழ்ச்சி தலைவர், வகுப்பு தலைமை மாணவர்கள், செஞ்சிலுவை சங்கம், தேசிய சேவை சங்கம், சாலை பாதுகாப்பு அணியினர் ஆகிய அனைத்து சங்க அணியினர், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடையாள சின்னம் அணிவித்தார். தலைமை ஆசிரியர் குமரீஸ்வரி நன்றி கூறினார்.