இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார் : புதிய இந்தியாவை உருவாக்க மக்களுக்கு அழைப்பு

8/15/2017 3:40:11 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: நாட்டின் 71வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையிலும், மாநில முதல்வர்கள் தலைமைச் செயலகங்களிலும் இன்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடி காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து  செங்கோட்டையின் லஹோரி கேட் வழியாக சுதந்திர தின விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு அவரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சிவப்பு கம்பள வரவேற்புடன் கொடியேற்றும் மேடைக்கு பிரதமர் மோடி அழைத்து வரப்பட்டார். அங்கு 21 குண்டுகள் முழங்க, தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். இயற்கை பேரிடர் காரணமாக பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருவது வேதனை தருகிறது. மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர்களுக்கு நாம் உதவுவோம். அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாகும். புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். மனதில் நம்பிகை இருந்தால் நினைத்ததை சாதித்து காட்ட முடியும். மூன்று படைகளின் மூலமாகவும் எதிரிகளை சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. எல்லைகளிலும், உள்நாட்டு பாதுகாப்பிலும் ராணுவ வீரர்களின் சேவை மதிப்பிட முடியாதது. தேசத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு இந்த அரிய நேரத்தில் வீர வணக்கம் செலுத்துவோம். கிருஷ்ண ஜெயந்தியையும், சுதந்திர தினத்தையும் நாம் ஒரு சேர கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 2022க்குள் புதிய இந்தியாவை படைத்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம்.

நாட்டு மக்கள் அனைவரும் சமம். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். உலக அளவில் நாம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க உறுதியுடன் பயணம் செய்வோம். தங்களது பங்களிப்புகளை அளித்து தேசத்தை நிர்மாணிப்பதற்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். தொழில் நுட்பத்தின் சாத்தியத்தால் ஜிஎஸ்டி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில கூட்டாட்சியின் ஆற்றலை ஜிஎஸ்டி பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளது. 9 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2.5 கோடிக்கும் அதிகமான ஏழை பெண்களுக்கு சமையல் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரை மீண்டும் சொர்க்க பூமியாக மாற்ற வேண்டியது நமது கடமையாகும். அடக்கு முறையாலும், தோட்டாக்களாலும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. தீவிரவாதம் அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக மென்மையான போக்கை கடைபிடித்தல் என்ற கேள்விக்கே இடம் கிடையாது.

ஊழலை ஒழித்து கட்ட கரன்சி வாபஸ் திட்டம் மிகப் பெரிய உதவியாக அமைந்தது. தானிய உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. அரசு மட்டும் 16 லட்சம் டன் தானியங்களை கொள்முதல் செய்துள்ளது. 2019ல் 99 பாசன திட்டங்கள் முழுமை அடைந்து விடும்.  கோடிக்கணக்கான இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு முத்ரா யோஜனா உதவியுள்ளது. முத்தலாக் முறைக்கு எதிரான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் வன்முறையை ஏற்க முடியாது. மதவாதமும், சாதியவாதமும் நஞ்சை போன்றவை. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் ரூ.800 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. கரன்சி வாபஸ் திட்டத்திற்கு பிறகு ரூ.3 லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது. ரூ.1.75 லட்சம் கோடி பணம் குறித்த விசாரணை நடைபெறுகிறது. ரூ.2 லட்சம் கோடி கருப்பு பணம் தற்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதன் மூலமாக பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர கரன்சி வாபஸ் திட்டம் உதவியது. இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 3 லட்சம் போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1.75 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டன. ஜிஎஸ்டிக்கு பிறகு நாடு முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் நீக்கப்பட்டதால், சரக்கு போக்குவரத்தில் 30 சதவீத நேரம் மிச்சமாகியுள்ளது. கடந்த ஓராண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையின் மூலமாக இந்த ஆண்டு மட்டும் 56 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும். 18 லட்சத்திற்கும் அதிகமானோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இது பிரதமர் மோடியின் 4வது சுதந்திர தின உரையாகும்.  டெல்லி செங்கோட்டையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள், எம்பிக்கள் உட்பட பல்வேறு விஐபிக்கள் பங்கேற்றனர்.

விழாவில், ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய 112 வீரர்களுக்கு வீர, தீர விருதுகள் வழங்கப்பட்டது. சிஆர்பிஎப் கமாண்டர்கள் பிரமோத் குமார் (வீரமரணம் அடைந்தவர்), சேத்தன் குமார் மற்றும் ராணுவ மேஜர் பிரீதம் சிங் கன்வார், ஹவில்தார் கிரிஸ் குரங் (வீரமரணம்), மேஜர் டேவிட் மேன்லன் (வீரமரணம்) ஆகிய 5 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும், 17 பேருக்கு சூரிய சக்ரா விருதும், 85 வீரர்களுக்கு சேனா விருதும், 3 பேருக்கு நவ சேனா விருதும், 2 பேருக்கு வாயு சேனா விருதும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 8,500 பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு ஆகியவையும் நடைபெற்றன.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் டெல்லியில் மட்டும் சுமார் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டெல்லி செங்கோட்டையை சுற்றி சுமார் 9 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தேசிய கமாண்டோ படையினர், ஆயுதம் தாங்கிய போலீசார், அதிரடி படையினர் உள்ளிட்டோரும் செங்கோட்டைக்கு பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்டனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை காரணமாக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. 60 மோப்ப நாய் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதமர் மோடி உரையாற்றும் பகுதியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அதிரடி படையினரின் 25 கவச வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு செங்கோட்டை பகுதியில் வான்வழி போக்குவரத்து தடுக்கப்பட்டது. மேலும் பாரா கிளைடிங், பலூன்கள் ஆகியவற்றை பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டது. டெல்லி மெட்ரோ நிலையங்களில் பிற்பகல் 2 மணி வரை வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ம.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி



  • சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைச்சர்கள் பயன்பாட்டுக்கு 1000 பேட்டரி கார்கள்: மத்திய அரசு முடிவு



  • உ.பி.யில் 100 குழந்தைகள் பலியான சம்பவம்: நீதி விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு



  • டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு



  • பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு



  • குஜராத்தில் இந்தாண்டு மட்டும் பன்றி காய்ச்சலுக்கு 208 பேர் பலி



  • ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை தவறு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • எல்லையில் பாக். ராணுவ அத்துமீறல்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்



  • தூய்மை இந்தியா பட்டியலில் திருப்பதிக்கு முதல் இடம்: சந்திரபாபு நாயுடு உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]