இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

8/14/2017 6:14:17 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

மும்பை: வந்தே மாதரத்தை தேசிய பாடலாக அறிவித்து அதை கட்டாயமாக பாட வகை செய்யும் வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் வந்தே மாதரம் குறித்த பாஜ மற்றும் இந்துத்துவ தலைவர்களின் பேச்சு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. அனைத்து தரப்பினரும் தேசிய பாடலான வந்தே மாதரத்தை பாட வேண்டும் என பாஜ தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வந்தே மாதரத்தை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் உருவாக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் கலந்து கொண்டு பேசுகையில், வந்தே மாதரம் பாடலை வைத்து அரசியல் சர்ச்சைகளை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். மாறாக அதை அனைவரும் கட்டாயம் பாட வகை செய்யும் வகையில் சட்டம் உருவாக்க வேண்டும். பொது மக்கள் அனைவரும் தினமும் வந்தே மாதரத்தை பாட வேண்டும். அதை செய்ய தவறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வந்தே மாதரத்தை பாட தேவையில்லை என சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வரும் அமைச்சர்களை நீக்க பாஜ தயாரா? வந்தே மாதரம் பாடாதவர்களை பாஜ நீக்குமா? எனவே இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டு விட்டு வந்தே மாதரத்தை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றார். ஏற்கனவே மும்பை மாநகராட்சி மேயர் விஷ்யநாத் மகாதேஷ்வர் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், மும்பையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளும் வாரம் இருமுறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ம.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி



  • சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைச்சர்கள் பயன்பாட்டுக்கு 1000 பேட்டரி கார்கள்: மத்திய அரசு முடிவு



  • உ.பி.யில் 100 குழந்தைகள் பலியான சம்பவம்: நீதி விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு



  • டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு



  • பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு



  • குஜராத்தில் இந்தாண்டு மட்டும் பன்றி காய்ச்சலுக்கு 208 பேர் பலி



  • ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை தவறு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • எல்லையில் பாக். ராணுவ அத்துமீறல்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்



  • தூய்மை இந்தியா பட்டியலில் திருப்பதிக்கு முதல் இடம்: சந்திரபாபு நாயுடு உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]